Wednesday, April 13, 2011

அறிவு இயலாமை வன்முறை

விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். அதை எதிர்கொள்ள நாங்கள் தயார் - ஜிஎன்.

அரசியல் இஸ்லாம் ஆன்மீக இஸ்லாம் என்ற தனது கட்டுரையில் தலைப்பில் கூட அரசியலையே முதன்மைப்படுத்தி இஸ்லாத்தின் ஆன்மீக பலத்தை அரசியல் பலமாக சித்தரிக்க முற்பட்டுள்ளார் நேசக் குமார் என்ற ஒரு இஸ்லாத்திற்கு எதிரான விமர்சகர்.

தனது தகுதிக்கு ஏற்றார்போலதான் சிந்திக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் மூலம் மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தியுள்ளார் நண்பர் நேசக்குமார்.

சந்திக்கும் தொலைவில் அவர் (போன்றோர்) இருந்தால் கலந்துரையாடலுக்கோ, நேர்கானலுக்கோ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். அதற்கு வழியில்லை என்றே நினைக்கிறேன்.

இஸ்லாம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கமல்ல - 'அரசியலிலிருந்து மதத்தை பிரித்து விடுங்கள்' என்று சொல்லி மதத்தை ஊனப்படுத்துவதையோ, அரசியல் ரவுடித்தனங்களை கண்டுக் கொள்ளாமல் மதம் ஒதுங்கி நின்று "மறைமுக ஆசிர்வாதம்" செய்து மகிழ்வதையோ இஸ்லாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது.

இஸ்லாத்தின் ஆன்மீக பலம் நூறு சதவிகிதம் என்றால் அது வழிகாட்டும் அரசியல் பலம் என்பதும் வலுவானதாகத்தான் இருக்கும்.

அரசியலை சொல்லாத எந்த ஆன்மீகமும் ஆட்சியாளர்களை, அதிகாரம் பெற்றவர்களை 'வல்லாதிக்க'த்தின் பக்கமே இழுத்து சென்றுக் கொண்டிருக்கும். அரசியலை சொல்லாத ஆன்மீக மதங்களை ஏற்றவர்கள் ஆட்சிப் புரியும் நாடுகளின் 'ஆட்சியாளர்கள் சிலரால் தான்' உலகம் அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருக்கிறதே தவிர நேசக்குமாரன் எடுத்துக்காட்டும் ஆப்கானிஸ்தான் - ஈரான் - ஈராக் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்களால் உலகின் அமைதி கெட்டுப்போகவில்லை. ஆதாரங்கள் இல்லாத போதும் அனைவரும் பாடும் பஜனையை நாமும் பாடினால் அது உண்மையாகி விடும் என்று நேசக்குமாரர்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இயலாவிட்டால் குறைந்த பட்சம் தாம் யார் என்பதை பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொள்ளவாவது செய்யட்டும்.

இனி நேசக்குமாரின் வாதங்களை பார்ப்போம்.

அரசியல் இஸ்லாம்ஆன்மீக இஸ்லாத்தின் அடித்தளம் உருவமிலா ஏக இறைக் கொள்கை என்றால், அரசியல் இஸ்லாத்தின் அடித்தளமாக விளங்குவது நபிவழிபாடு. இந்த அரசியல் இஸ்லாத்தை நபிகளார் முன்மொழிந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று அந்தக் கால கிறித்துவர்களும், யூதர்களும் கூறிய குற்றச் சாட்டுக்களிலிருந்து, இன்று கூறப்படும் அச்சூழலுக்கேயான நிர்ப்பந்தங்கள் என்பது வரை ஏகப் பட்ட காரணங்கள் இதன் தோற்றுவாய் என அறிஞர்களால் இன்றளவும் விவாதிக்கப் பட்டுவருகின்றன. **நேசக்குமார்

 • உருவமில்லா இறைக் கொள்கை என்று இஸ்லாத்தில் எந்தக் கொள்கையும் இல்லை. கடவுளை யாரும் நேரில் காணாததால் அவன் உருவத்தை யாரும் கற்பனை செய்யாதீர்கள் என்பதுதான் இஸ்லாம் முன் வைக்கும் வாதம். உருவமற்ற சூனியத்தை எந்த முஸ்லிமும் வணங்கவில்லை. இறைவன் அவனுக்கே உரிய தன்மைகளுடனும் - உருவத்துடனும் இருக்கத்தான் செய்கிறான் அவனது உருவம் மனித சிந்தனைக்கோ - கற்பனைக்கோ உட்படாதது என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. (மனித சிந்தனை வடிவமைத்துள்ள கடவுளைப் பாருங்கள். அந்த கற்பனைகளில் கடவுள் எத்துனை கேவலப்படுத்தப்பட்டுள்ளான் என்பது புரியும்)
 • முஹம்மத் அவர்கள் முன் மொழிந்தது அப்பட்டமான ஆன்மீக மோசடி என்று யூதமும் - கிறிஸ்த்துவமும் சொன்னதும் இன்றைக்கும் சொல்வதும் நடக்கத்தான் செய்கின்றன. ஆனால் முஹம்மத் அவர்களோ அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களோ யூதர்களுக்கு வந்த வழிகாட்டியையோ (மோசே) கிறிஸ்த்துவர்களுக்கு வந்த வழிகாட்டியையோ (இயேசு) ஒருபோதும் குறை சொன்னதே கிடையாது.
 • முஹம்மத் அவர்கள் வருவதற்கு முன் இயேசு முன் மொழிந்த ஆன்மீகத்தைக் கூட அவர் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் சவுல் உட்பட 'இயேசுவின் ஆன்மீக மோசடி' என்றே வர்ணித்தார்கள் என்பதை நேசக்குமார் நினைவுக் கூற வேண்டும்.

**'இஸ்லாமியர்களிடையே கூட முற்போக்கானவர்கள் என தம்மை கருதிக் கொள்வோர், அரசியல் இஸ்லாத்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து இப்போதெல்லாம் கருத்து தெரிவிப்பதை பார்க்க முடிகிறது'**நேசக்குமார்

 • இன்றைக்கு உலகில் நடக்கக் கூடிய அரசியலில் எந்த அரசியலை 'இஸ்லாமிய அரசியல்' என்று இஸ்லாமிய முற்போக்குவாதிகள் கருதுகிறாரகள் என்பதை நேசக்குமார் சற்று புரியும் படி விளக்கட்டும்.

**அரசியல் இஸ்லாம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். அரசியல் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளாமல் அடிப்படைவாத முஸ்லிம்களின் பேச்சை, செயல்பாட்டை, சிந்தனா முறையை புரிந்து கொள்ள முடியாது.அரசியல் இஸ்லாத்தின் நம்பிக்கைகள்இந்த அரசியல் இஸ்லாம் ஒப்புக் கொள்ளும் 'உண்மையான முஸ்லிம்கள்' கீழ்க்கண்ட நம்பிக்கைகளை உடையவர்கள்:

1. அல்லாஹ் எனும் ஏக இறைவனை மட்டுமே உலகம் முழுக்க உள்ளோர் வணங்க வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், 'அல்லாஹ்' என்ற அரபிப் பெயரில் - திருக்குரான் மற்றும் ஹதீதுகள் வர்ணிக்கும் குணாதிசயங்களுடன் மட்டுமே இக்கடவுளை வணங்க வேண்டும். கடவுள் என்றோ, பிரும்மா, சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம் போன்ற பெயர்களில் கூட இந்த ஏக இறைவனை வணங்கக் கூடாது. இந்த கடவுளுக்கு திருக்குரான் கற்பிக்கும் குணங்களையே வரித்து வணங்க வேண்டும். இந்த அல்லாஹ்வை கருணையுள்ள ஒரு கடவுளாகவோ(கிறிஸ்துவர்களைப் போன்று), தாயுணர்வு நிரம்பிய ஒரு அன்புத் தெய்வமாகவோ(இந்துக்களைப் போன்று), விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியாகவோ (இந்துக்களில் ஒரு பகுதியினர் கருதுவது போன்று) இம்மாதிரி, தமக்கு பிடித்த, வேண்டுகிற குணாதிசயங்களோடு உள்ள கடவுளாக உருவகப் படுத்தி வணங்கக் கூடாது.(திருக்குரான், இந்த 'அல்லாஹ்' வை ஒரு பொறாமை குணம் கொண்ட, கடுமையான ஆணாதிக்க அரபிக் கடவுளாக உருவகம் செய்கிறது). கவனித்துப் பார்த்தால், இதை மூடி மறைத்து அழகிய வாதங்களுடன், தர்க்க நியாயங்களுடன் இஸ்லாமிஸ்டுகள் நியாயப் படுத்துவார்கள்.**நேசக்குமார்

 • இந்த வாதங்கள் நேசக்குமாரனின் இயலாமையா.. அல்லது வன்முறைக்கு வித்திடும் முதல் படியா என்பதை புரிந்துக் கொள் சற்று கடினமாகத்தான் இருக்கின்றது.
 • 'மொழி என்பதும் அதன் வார்த்தைகள் என்பதும் ஒன்றைப் புரிந்துக் கொள்வதற்காக உதவிடும் ஒரு கருவியாகும்' தமிழ் என்பது எப்படி ஒரு மொழியோ அதேபோன்றுதான் அரபும். 'இலாஹ்' என்பதும் 'அல்லாஹ்" என்பதும் அந்த மொழியில் ஒரு பரம்பொருளை சுட்டும் வார்த்தைகளாகும். முஹம்மத் அந்த மண்ணில் தனது பிரச்சாரத்தை துவங்குவதற்கு முன் அந்த மக்களிடம் இருந்த ஆன்மீக நம்பிக்கையும் அந்த நம்பிக்கைக்காக அந்த மக்கள் வெளிப்படுத்திய வார்த்தையும் அல்லாஹ் என்றே இருந்தது.
 • முஹம்மத் வந்து இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தவில்லை. அரபு மொழி பேசக் கூடிய யூத - கிறிஸ்த்துவர்கள் கூட அன்றிலிருந்து இன்றுவரை கடவுளை குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையே பயனடுத்தி வருகிறார்கள். தமிழக கிறிஸ்த்துவர்களுக்கு வேண்டுமானால் 'அல்லாஹ்' என்ற வார்த்தை முஸ்லிம்களின் வார்த்தையாகத் தெரியலாம். அரபு நாட்டு கிறிஸ்த்தவர்களுக்கு முஹம்மத் அவர்கள் வருவதற்க முன்பே அது மிக பரச்சயப்பட்ட வார்த்தையாகும்.
 • முஸ்லிம்கள், நேசக்குமார் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளால் அல்லாஹ்வை குறிப்பிடுவதில்லை காரணம் என்ன?
 • பெற்றெடுத்தவள் தாய், தாய் என்ற அந்தஸ்த்தை உலகில் ஒருவளுக்கு மட்டும் தான் கொடுக்க முடியும். அவளை தாய் என்றோ, ஆத்தாள் என்றோ, அம்மா என்றோ அவளது கண்ணியம் குறையாத எந்த வார்த்தையாளும் குறிப்பிடலாம். ஆனால் பெற்றத்தாயை யாரும் மகள் என்றோ, சின்னாத்தாள் என்றோ, சகோதரி மனைவி என்றோ குறிப்பிட முடியுமா..? மகள், சகோதரி, சிறிய தாய் மனைவி போன்ற வார்த்தைகள் நல்ல வார்த்தைகளாக இருக்கலாம் ஆனால் அந்த வார்த்தைகளிலிருந்து பெறப்படும் பொருள் பெற்றத் தாயுடன் பொருந்திப்போகக் கூடியதல்ல. அந்த வார்த்தைகள் சுட்டும் தன்மைகள் பெற்றத்தாயின் தன்மைகளை ஒத்திருக்கக் கூடியவையல்ல.
 • இப்போது சிந்திப்போம்.
 • மாற்றுக் கொள்கையுள்ள மதத்தவர்கள் 'பிரும்மா, சிவன், ஜெஹோவா, இயேசு, சாமி, தெய்வம்" என்றெல்லாம் கடவுளை குறிப்பிடுகிறார்கள் என்று மேலோட்டமாக பூசி மொழுகாமல் அந்த வார்த்தைகளிலிருந்து கடவுள் குறித்து அவர்கள் விளங்கியுள்ள பொருளும் அதன் தன்மைகளும் என்ன என்பதை பார்க்கும் போது அவர்கள் கடவுளாக விளங்கியுள்ள அந்த சிந்தனை வெளிப்பாடுகள் கடவுள் என்ற ஒரு சக்தி இருந்தால் அந்த சக்திக்கு எந்த விதத்திலும் பொருந்திப் போகக் கூடியவையாக இருக்கவேயில்லை. (இதுபற்றி இறைவனும் அவன் தன்மைகளும் என்ற கட்டுரையில் நாம் விரிவாக விளக்கியுள்ளோம்) இறைவனுக்கு எந்தத் தகுதிகளெல்லாம் இருக்கக் கூடாதோ அந்தத் தகுதிகளுடன் அந்தத் தகுதியை குறிக்கும் பெயர்களுடன் பிறர் இறைவனை கற்பனை செய்துக் கொள்வதையே முஸ்லிம்களும் கடைபிடிக்க வேண்டுமாம். முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டுள்ள அந்த இறைவனிடம் கருணையுள்ளம் இல்லையாம். (இயேசுவுக்கு (அதாவது இயேசுவாக கருதப்படுபவருக்கு) ஓட்டு) முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்ட இறைவனிடத்தில் தாயன்பு இல்லையாம் (தாயாக சித்தரிக்கப்படும் பல சிலைகளுக்கு ஓட்டு) இப்படியெல்லாம் சிந்தனைப்பூர்வமாக? ஆராய்ச்சிப்பூர்வமாக? எழுதிக் கொண்டே போகிறார் நேசக்குமார்.
 • பெண் என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயின்றுவிட்டு தாயையும் தாரத்தையும் ஒரே இயல்புடன் பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை. இவளும் பெண்தான் அவளும் பெண்தான் என்று தாரத்திடம் கிடைக்க வேண்டியதை தாயிடம் எதிர்பார்க்கும் சிந்தனை இந்த சிந்தனை.
 • பெண் என்றாலும் தாயும் தாரமும் வெவ்வேறானவர்கள் என் தேவைக்காக நான் இருவரையும் சம கண்ணோட்டத்தில் பார்த்தால் அது தவறு என்று ஒருவேளை நேசக்குமாரன் சிந்தித்தால் 'நீ பிற்போக்கான சிந்தனையில் மூழ்குகிறாய்' என்று அவரது உள் மனம் அவரை கிண்டல் செய்தாலும் செய்யும்.
 • இறைவனுக்கு இருக்க வேண்டிய அத்துனை பண்புகளும், தன்மைகளும் திருக்குர்ஆனில் ஆயிரக்கணக்கான வசனங்களில் சொல்லப்படிருந்தும் - திருக்குர்ஆனின் ஆரம்ப வசனங்களிலேயே இறைவன் அளவற்ற அருளாளன் - நிகரற்ற அன்புடையோன் என்று அவனது கருணையும் - இரக்கமும் வெளிப்பட்டிருந்தும் நேசக்குமார் அந்த இறைவனை பொறாமைக் காரனாகவும், ஆணாதிக்க வெறிபிடித்தவனாகவும் சித்தரிக்கிறார் என்றால் சர்ச்சை நாயகனாக தன்னை சித்தரித்துக் கொள்வதற்கே அவர் கீ போர்டில் கை வைக்கிறார் என்பது புலப்படுகிறது.
 • அல்லாஹ்வை விட அவனது தூதரான முஹம்மத் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா... அரசியல் இஸ்லாம் என்று நேசக்குமாரர் எழுதியுள்ள வாதங்கள் என்ன.. தொடர்ச்சியாகப் பார்ப்போம்.

Sunday, April 10, 2011

அறிவு இயலாமை வன்முறை - 1

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா...? 3

ஆலு இம்ரான் 3:31 வது வசனத்தில் எல்லா நிலைகளிலும் முஹம்மத் என்ற இறைத்தூதர் அவர்களை பின்பற்றுவதின் அவசியம் பற்றி கூறப்பட்டள்ளது. அதில் இறைவனை நேசிக்கக் கூடிய ஆன்மீகவாதி எவராக இருந்தாலும் அவர் முஹம்மத் என்ற அந்த ஆன்மீகத்தலைவரை பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்ற கட்டளை மிக வலுவாக முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை கடந்த இரண்டு தொடர்களில் விளக்கினோம். அடுத்து அந்த தலைவரை ஏற்றுக் கொண்டு வாழும் முஸ்லிம்கள் தங்கள் நம்பிக்கையை மீண்டும் பரிசீலித்துக் கொள்ளும் விதத்தில் ஒரு தூண்டல் அந்த வசனத்தில் இருக்கின்றது.

அதை விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

(மனிதர்களே!) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும்.

இங்கு இறைவன் 'என் வழியைப் பின்பற்றுங்கள்' என்று சொல்ல சொல்லாமல் 'என்னைப் பின்பற்றுங்கள்' என்று சொல்ல சொல்கிறான். என்னைப் பின்பற்றுங்கள் என்பதற்கும் என் வழியைப் பின்பற்றுங்கள் என்பதற்;கும் வித்தியாசம் உள்ளது.

'என் வழியைப் பின்பற்றுங்கள்' என்றால் அது வெறும் வார்த்தைகளிலிருந்து பெறும் வழிகாட்டலாகவே அமையும். ஏனெனில் வார்த்தைகள் தான் வழிகாட்டும்.

'என்னைப் பின்பற்றுங்கள்' என்பது மொத்தமாக ஒருவருடைய வாழ்க்கையே வழிகாட்டலாக அமைந்து விடுவதை குறிப்பதாகும்.

வாழ்ந்து மறைந்த - இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கின்ற உலகத் தலைவர்கள் அனைவரையும் - அவர் எந்தத் துறையை சார்ந்தவராக இருந்தாலும் சரி - நாம் எடுத்துக் கொள்வோமேயானால் அவர்கள், மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக எடுத்து வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் அவர்களின் வழிகாட்டலாக இருக்குமே தவிர அவர்களின் வாழ்க்கையாக இருக்காது.

நல்ல கருத்துக்களை மேடையில் முழங்கி - பேனா முனையால், கீ-போர்டுகளால் கொட்டித்தீர்க்கும் ஒரு எழுத்தாளனோ பேச்சாளனோ தனது கருத்துக்கு மாற்றமாக நடக்கும் தருணங்களில் அதை பிறர் சுட்டிக்காட்டும் போது சர்வசாதாரணமாக 'என்னைப் பார்க்காதே, என் கருத்தைப் பார்' என்று வசனம் பேசிவிட்டு கழன்றுக் கொள்ளும் நிலையைப் பார்க்கிறோம்.

எல்லா துறைகளுக்கும் வழிகாட்டி 'என்னையும் பார் என் கருத்துக்களையும் பார் ஒன்றுக் கொன்று முரண்படவே செய்யாது' என்று துணிந்து அறிவித்து வாழக் கூடிய தகுதிப் பெற்றவர்கள் நிச்சயம் இறைத்தூதர்களாக மட்டுமே இருக்க முடியும். அதிலும் குறிப்பாக மாமனிதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் அதில் முன்னணியில் இருப்பார்கள். அதனால் தான் இறைக் கட்டளைப் படி மிக துணிச்சலுடன் 'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற வாதத்தை அவர்களால் மக்கள் மன்றத்தில் வைக்க முடிந்தது. அவர்களின் வாழ்க்கை 100 சதவிகிதம் அங்கீகாரம் பெற்றதால் தான் இறைவனே 'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற வழிகாட்டலை மக்கள் முன் வைக்க சொல்கிறான்.

என்னைப் பின்பற்றுங்கள் என்றால் எதில் பின்பற்றுவது என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு வரலாம். இதை அவர்கள் வெளிப்படையாக சொல்லா விட்டாலும் கூட அவர்களின் வாழ்க்கையில் இந்த சந்தேகம் பிரதிபளிக்கின்றது.

கலை, இலக்கியம், பொருளாதாரம், பெண்ணியம், அரசியல், குடும்பம், ஆட்சியதிகாரம், ஊடகங்கள் என்று உலகில் வியாபித்து கிடக்கும் துறைகளில் முஸ்லிம்கள் ஏதோ ஒரு விதத்தில் பங்காற்றவே செய்கிறார்கள். இவற்றில் பங்காற்றும் பலதரப்பட்ட முஸ்லிம்களின் எண்ணவோட்டங்களும் பலதரப்பட்டவைகளாகவே அமைந்து விடுகின்றன.
முஸ்லிம் என்ற பெயரால் உலகமகா இறை இயக்கத்தில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள இவர்கள் 'தாம் எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும் பிரச்சனையில்லை அந்த துறைக்கு தாம் இணைந்துள்ள இறைஇயக்கமும் அந்த இயக்கத்தின் கடைசித் தலைவரும் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள்' என்ற எண்ணத்தை வளர்;த்துக் கொண்டே தம் பணியைத் துவங்க வேண்டும். இதை அந்த வசனம் தன்னுள் பொதித்து வைத்துள்ளது.
துரதிஷ்டவசமாக பெரும்பான்மையான முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கின்றதென்றால் 'தாம் ஏற்றுக் கொண்டுள்ள முஹம்மத்(ஸல்) அவர்கள் தொழுகைக்கும் நோன்பிற்கும் ஹஜ்ஜூக்கும் உரியவர்கள்' என்ற நிலையிலேயே இருக்கின்றது.

'பள்ளிவாசல் கட்டுதல் - தொப்பிப் போட்டுக் கொள்ளுதல் - தராவீஹ் பற்றி விவாதித்தல் - தர்காவையும், மௌலீதையும் அவர்களோடு சம்பந்தப்படுத்திப் பேசுதல் இவற்றிற்காகத்தான் முஹம்மத்(ஸல்) அவர்கள்' என்ற நிலையைப் பரவலாக பார்க்க முடிகின்றது.

இஸ்லாமிய இயக்கத்திலும் அதன் இலட்சியங்களிலும் இது மிக மிக மிக மிக சிறிய பகுதியாகும். 'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற கட்டளையை இப்படி மிக மிக சிறிய அளவில் வைத்து முடக்கிவிடும் முயற்சியை இப்படியும் அப்படியுமாக சில முஸ்லிம்கள் செய்து வருகிறார்கள். அந்த வசனத்தின் ஆழம் புரியாததே இதற்கு காரணமாகும்.

என்னைப் பின்பற்றுங்கள் என்பதில்,

என் ஆன்மீகத்தைப் பின்பற்றுங்கள்,

என் அரசியலைப் பின்பற்றுங்கள்,

என் குடும்ப இயலைப் பின்பற்றுங்கள்,

என் பொருளியலைப் பின்பற்றுங்கள்,

என் இலக்கியத்தையும், வீரத்தையும், விவேகத்தையும், நட்பையும் நலினத்தையும், மறுமை உறுதியையும் உலக பற்றின்மையையும்,  நடை உடை பாவனைகளையும் பின்பற்றுங்கள் என்பது உட்பட அவர்களின் மொத்த வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும் என்ற அர்த்தம் பொதிந்துள்ளது.

இதை விளங்காததால் தான் கல்வியறிவு பெற்றுள்ள முஸ்லிம்கள் முதல் பாமர முஸ்லிம்கள் வரை ஒவ்வொரு துறைக்கு ஒரு தலைவர் என்று பல தலைவர்களை தங்கள் வழிகாட்டிகளாக்கிக் கொண்டு அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆன்மீகத் தலைவர்கள்.

பிறரால் எந்த வகையிலும் அந்த இடத்தை நிரப்ப முடியாத அளவிற்கு துளியும் குறை வைக்காமல் பணியாற்றி விட்டு சென்ற அந்த ஆன்மீகத் தலைவரை ஏற்றுக் கொண்ட சமுதாயம் அந்த மாபெரும் தலைவரின் மறைவுக்குப் பிறகு அனேக ஆன்மீகத் தலைவர்களை உருவாக்கிக் கொண்டது.

முஸ்லிம்களின் ஆன்மீக வழியை தீர்மானிப்பதில் இடம் பெற்றுள்ள ஆன்மீகத் தலைவர்களைப் பார்ப்போம்.

அபூ ஹனிபா (ஹனபி இமாம்) முஹம்மத் பின் இத்ரீஸ் (ஷாபி இமாம்) மாலிக் பின் அனஸ் (மாலிக் இமாம்) அஹ்மத் பின் ஹம்பல்(ஹம்பலி இமாம்) அவ்ஸாயி, தவ்ரி, இப்னுத் தைமிய்யா, கஸ்ஸாலி, இப்னுஅரபி, முஹையத்தீன், முஹம்மத் பின் அப்துல்வஹாப் இப்படியாக அகில உலக பிரபல்யமான தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இவர்களில் எவரையாவது ஏற்றுப் பின்பற்றினால் தான் இஸ்லாத்தை விளங்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களில் பெரும்பாலோர் இடத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஆழமாகப் பதிந்துப் போய் விட்டது. விளைவு?! மத்ஹப் பிரிவினைகள் உருவாயின! இறைவனும் மனிதனும் இரண்டர கலந்து விட முடியும் என்ற மகா பயங்கர அத்வைதக் கொள்கைப் பிரிவு உருவாகியது! தரீக்கா பிரிவும் தர்கா பிரிவும் உருவாயின! வஹ்ஹாபிய்யத் பிரிவு உருவாகியது!

இந்த ஆன்மீகத் தலைவர்களின் பெயரால் பிரிவினை - பிரிவினை என்று முஸ்லிம் உம்மத் பல கூறுகளாக சிதைந்துப் போய்விட்டது.

'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற அந்த இறைத்தூதரின் வாக்கை முஸ்லிம் உம்மத் ஆழமாக விளங்கி இருந்தால் அந்த தலைவரின் மறைவுக்குப் பிறகு வேறு எந்த ஆன்மீகத் தலைவரும் உருவாகி இருக்கவே மாட்டார்கள்.

இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் 'என்னைப் பின்பற்றுங்கள்' என்று பகிரங்கமாகவும், அழுத்தமாகவும் அறிவித்து விட்டு சென்ற அந்த தலைவரை விட்டுவிட்டு 'எங்களைப் பின்பற்றாதீர்கள் - எங்களைப் பின்பற்றாதீர்கள் எங்களை பின்பற்றினால் நாங்கள் உங்களுக்கு பொறுப்புதாரியாக மாட்டோம் மனிதர்கள் என்ற முறையில் எங்களிடம் தவறுகள் ஏற்படும் அதனால் எங்களைப் பின்பற்றாதீர்கள்' என்று மீண்டும் மீண்டும் சொல்லி விட்டு சென்ற பிந்தியவர்களை இந்த சமுதாயம் பின்பற்றத் துவங்கியதுதான்.

விளைவு! சமுதாயத்தில் ஷாபி பள்ளிகளும் ஹனபி பள்ளிகளும் சமுதாய பிரிவின் அடையாளச் சின்னங்களாக உயர்ந்தன. உன் பள்ளி வேறு, என் பள்ளி வேறு. நீ வேறு, நான் வேறு. உன் கொள்கை வேறு, என் கொள்கை வேறு என்ற கூப்பாடுகள் தலைத் தூக்கின. கடந்தக் காலங்களில் இதற்காக பல தலைகள் உருண்டன.

இறைவனை மறக்க செய்து இசையிலும், போதையிலும், காமத்திலும் முஸ்லிம்களை திளைக்க செய்ய 'தர்காக்கள்' புற்றீசல்கள் போல உலக நாடுகளில் ஆங்காங்கே முளைத்தன. இன்றைக்கும் கூட ஏராளமான மட முஸ்லிம்கள் 'தர்காவே சரணம்' என்று காவடி ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கும் சில ஆன்மீகத் தலைவர்கள் வழி காட்டிகளாக இருந்தார்கள். இன்றைக்கும் இருக்கிறார்கள்.

மனதால் இறைவனை நினை. நினைவுகள் முற்றும் போது அவனோடு இரண்டற கலந்து விடலாம் உடலால் அவனை வணங்கத் தேவையில்லை. இரண்டற கலந்த பிறகு நீ அவனை வணங்கினால் உன்னையே நீ வணங்கிக் கொள்கிறாய் என்பதைத் தவிர வேறு அர்த்தம் இல்லை என்ற மோசமான கொள்கையை மக்களிடம் விதைத்து 'பணம் பண்ணும்' ஆன்மீகத் தலைவர்கள் உதித்தார்கள்.  ஒரு சமுதாயம் பள்ளிவாசல்களையும் தொழுகைகளையும் மறந்து திண்ணைத் தூங்கிகளாக உருவாயின.

இவர்களில் ஒருவர் இன்னொருவரின் கொள்கை வழி குறித்து சிந்திக்க முடியாத அளவிற்கு  - சிந்தித்தாலும் மாற்றுக் கொள்கையுடையவர்கள் மீது வெறுப்புணர்வே மிஞ்சும் அளவிற்கு இவர்களிடம் மடத்தனங்கள் காலூன்றி நிலைப் பெற்றன.

இதற்கெல்லாம் என்னக் காரணம்?

'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற அந்தக் கொள்கை சரியாக விளங்காமேயேயாகும்.

'என்னைப் பின்பற்றுங்கள்' என்பதை இந்த சமுதாயம் விளங்கி இடைத் தலைவர்கள் இல்லாமல் அந்த ஒரேத் தலைவரையே இந்த சமுதாயம் பின்பற்ற துவங்கி விட்டால் அது உலக அளவில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

இதை நாம் வெறும் வார்த்தையாகச் சொல்லவில்லை. வேறு எந்தத் தலைவரும் இல்லாமல் அந்த ஒரேத் தலைவரைப் பின்பற்றிய நபித் தோழர்கள் உலகில் எத்தகைய புரட்சியை செய்துக் காட்டினார்கள் என்பதை சிந்தியுங்கள் நம் வார்த்தையின் அர்த்தம் புரியும்.

தொடரும்

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா...? பகுதி : 2

பகுதி : 2

அந்தத் தலைவரைப் பின்பற்றத்தான் வேண்டுமா...?

ஆலு இம்ரான் என்ற மூன்றாவது அத்தியாயத்தின் 31 வசனத்தின் விளக்கத்தை முன் தொடரில் ஒரளவு கண்டோம்;. இறை நேசம் என்ற ஆன்மீகத் தேட்டத்தின் வழிகாட்டல் முஹம்மத் (ஸல்) அவர்களிடமே இருக்கின்றது என்பதை அந்த வசனத்தின் வழியாக இறைவன் சொல்லியுள்ளான் என்பதை உதாரணங்களுடன் விளக்கினோம். அதன் தொடர்சியை இப்போது பார்ப்போம்.

'(மனிதர்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக'..

ஆன்மீகம் என்பதே இறைவனை நேசிப்பதற்குரிய - அவனை அடைவதற்குரிய வழியாகும் என்பதில் எந்த ஆத்திகரும் மாற்று கருத்துக் கொள்ள மாட்டார். அவர்களில் பெரும்பான்மையோர் ஒரு விஷயம் குறித்து எப்போதும் சிந்திப்பதே இல்லை என்பதை நாம் இங்கு சுட்டிக் காட்டித்தான் ஆக வேண்டும்.

இவர்கள் 'நாங்கள் இறைவனை நேசிக்கிறோம்' என்ற பெயரில் ஏராளமான சடங்குகள் - சம்பர்தாயங்கள் - வணக்கத்தளங்கள் - வணக்க வழிபாடுகள் - யாத்திரைகள் - செலவுகள் என்று  குதூகல ஆர்பாட்டங்கள் செய்துக் கொண்டிருக்கிறார்களே தவிர 'நாம் இறைவனை நேசிக்கின்றோமே... இறைவன் நம்மை நேசிக்கின்றான... என்ற எதிர்மறையான - அலட்சியப்படுத்தவே முடியாத - அலட்சியப்படுத்தக் கூடாத - கேள்வியை தங்களுக்குள் என்றைக்கும் இவர்கள் கேட்டுக் கொள்வதே இல்லை.

மனம்போன போக்கிலோ - மத குருக்களின் போக்கிலோ கண்மூடித்தனமாக போவதே ஆன்மீகம், இறை நேசம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மனம் போன போக்கில் நடந்தால் இறைவனை அடைந்துக் கொள்ள முடியும் என்ற இவர்களின் மாய சித்தாந்தம் தான் ' தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான்' என்றும் 'எந்த நதியாய் இருந்தால் என்ன கடலில் கலப்பதுதான் முக்கியம்' என்றும் தீர்மானமற்ற தத்துவங்களை ஆன்மீக அடையாளமாக முன் வைக்கின்றது.

இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டுதல் பெறாத, மனிதனாக உருவாக்கிக் கொண்ட இத்தகைய அன்மீகத் தத்துவங்களை அதை உருவாக்கியவர்களாலேயே தங்கள் வாழ்க்கைக்கு முன்னுதாரனமாக கொள்ள முடியாது. தெய்வம் என்றால் அது தெய்வம் சிலையென்றால் வெறும் சிலைதான் என்பவர்கள், அது பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்தது என்று விளக்கம் கூறுபவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இதை பொருத்திப் பார்க்க சம்மதிப்பார்களா..  அவர்கள் வீட்டில் உள்ள பொருளை ஒருவன் எடுத்துக் கொண்டு 'இது உன் பொருள் என்றால் உன் பொருள், என் பொருள் என்றால் என்பொருள்தான்' என்கிறான். 'இது என் தத்துவத்திலிருந்து பெறப்பட்ட வழிகாட்டல் என்பதால் இது உன் பொருளா.. என் பொருளா.. என்பதை நீயே தீர்மானித்துக் கொள்' என்பார்களா..

'எல்லா நதிகளும் கடலில் கலக்கின்றன' என்று தீர்மானங்கள் இன்றி பாய்ந்தோடும் நதிகளை உதாரணமாக்குவோர் 'அனைத்து நாடுகளின் அரசியல் சாசனமும் நல்லதைதான் ஏவுகின்றன' என்று பிற நாட்டு அரசியல் சாசனத்தை நம் நாட்டில் நடைமுறைப் படுத்துவார்களா...

ஒரு கருத்தை அழகாக சொல்கின்றோமா என்பதை விட அறிவுப் பூர்வமாக சொல்கின்றோமா என்பதுதான் முக்கியம். சில அழகியல் தத்துவங்கள் மனிதனின் அறிவை உறங்க வைத்துவிடும் என்பதற்கு நாம் எழுதிய இவைகளே சான்றாகும்.

நாம் இறைவனை நேசிக்கின்றோமா என்பது எவ்வளவு முக்கியமான கேள்வியோ அதை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக 'இறைவன் நம்மை நேசிக்கின்றானா..' என்ற கேள்வி நம் உள்ளங்களில் பிறக்க வேண்டும். இறைவன் நம்மை நேசிக்கும் வழியை அறிந்தால் தான் நாம் அவனை நேசிக்கும் வழி இடற்பாடுகள் இல்லாமல் காணப்படும்.

இறைவன் நம்மை நேசிக்கின்றானா என்பதை நாமாக சொந்த முயற்சியில் அறிந்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அது உணர்வியலுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட நிலையாகும்.

இறைவன் நம்மை நேசிப்பதாக இருந்தால் 'நான் இந்த வழியில் உங்களை நேசிக்கிறேன்' என்று அவன் சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்வதின் வழியாகத்தான் நாம் அதை அடைந்துக் கொள்ள முடியும்.

உணர்வியலுக்கும் அறிவியலுக்கும் கட்டுப்படாத அந்த மகத்தான வழியை இறைவன், நாம் விளக்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் தெளிவு படுத்துகிறான்.

'(மனிதர்களே!) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் வழியாக) அவன் உங்களை நேசிப்பான் என்று (தூதரே) நீர் கூறும்'.

முஹ்ம்மத் என்ற அந்த இறைத்தூதரை பின்பற்றுகிறவர்கள் எவரோ அவர்களை இறைவன் நேசிப்பான் என்று இந்த வசனம் உறுதி கூறுகிறது.
அவரை பின்பற்றுவதில் அலட்சியம் கூடாது.

இது ஒரு சாதாரண உபதேசம் அல்ல. தேடலின் இலக்கு இதுதான். இறைவனை நம்பி வாழும் உலக ஆன்மீகவாதிகள் அனைவருமே இறைவனிடம் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காகவே ஆன்மீகவாதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் உள்ளங்களில் நிலைக் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய ஆனந்தமோ, அச்சமோ அவர்களை அவன் பால் இயங்க வைக்கும் உந்து சக்தியாக இருக்கின்றது. இந் நிலையில் 'இந்த வழியாகத் தான் என்னை அடைய முடியும்' என்ற வழிகாட்டல் இறைவன் புறத்திலிருந்து கிடைக்கும் போது அதை ஆன்மீகவாதிகளால் அலட்சியப்படுத்த முடியுமா..?

 மதம் கடந்த மனநிலை வேண்டும்.

''இறைவனை நேசிக்கும் நிலையில் நான் ஒரு ஹிந்து'', ''இறைவனை நேசிக்கும் நிலையில் நான் ஒரு கிறிஸ்தவன்,'' ''நான் புத்த மதத்தவனாக இருக்கும் நிலையில் இறைவனை நேசிக்கிறேன்''  முஹம்மதை பின்பற்றுவதன் வழியாகத்தான் இறைவன் எங்களை நேசிப்பான் என்றால் நாங்கள் அனைவரும் முஸ்லிம்களாக மாற வேண்டுமா..!' என்ற கேள்வி இங்கு பிறக்கத்தான் செய்யும்.

சில அடிப்படைகள் மீது தெளிவின்மையின் காரணமாகவே இந்த கேள்வி பிறக்கின்றன.

இறைவன் முஸ்லிம்களுக்கு சொந்தமானவனும் அல்ல. முஹம்மத் முஸ்லிம்களுக்காக அனுப்பப்பட்ட தூதரும் அல்ல. முஸ்லிம்களாக அறியப்படும் இவர்களும் ஆன்மீகவாதிகளே. இறைவனை அடையும் வழியை முஹம்மத் என்ற இறைத்தூதர் வழியாகப் பெற்று அதில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டதால் முதல் கட்டமாக இவர்களை 'கட்டுப்பட்டவர்கள்' (முஸ்லிம் என்ற அரபு பதத்திற்கு கட்டுப்பட்டவர் என்று பொருள்) என்று இடுகுறி பெயரால் இறைவன் சுட்டிக் காட்டுகிறான். முஹம்மத் என்ற இறைத்தூதர் வழியாக இறைவனை அடையும் வழியை பெறும் எவரும் 'கட்டுப்பட்டவர் - முஸ்லிம்' என்ற அந்த இடுகுறிப் பெயருக்குள் வந்து விடுவார். 'முஸ்லிம்' என்பது ஒரு இனத்திற்கு சூட்டப்பட்டப் பெயரல்ல என்பதை விளங்குவது அவசியம். எனவே இறைவன் நம்மை நேசிக்க வேண்டும் என்ற தேடலில் நாம் இறங்கும் போது ஏற்கனவே நாம் இருக்கும் மதத்தை ஒரு அடையாள சின்னமாக்கிக் கொண்டு அந்த தேடலை துவங்கக் கூடாது. அது பல முட்டுக்கட்டைகளை நமக்கு ஏற்படுத்தி விடும்.

இந்தியா என்ற நாட்டில் ஒருவர் வாழ்வதால் தன்னை இந்தியன் என்றும், அந்த நாட்டின் உள்ளே இந்த மொழியைப் பேசுவதால் தன்னை தமிழன் என்றும் அடையளப்படுத்திக் கொள்ளும் அதே நியாயம் தான் இறைவனை அடையும் வழியைப் பெற்றப்பிறகு தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலும் அடங்கி இருக்கிறது.

மருத்துவக் கல்விக் கற்றவர் தமக்கு 'டாக்டர்' என்று அடையாளமிட்டுக் கொள்கிறார்,

பொறியியளாளர் ஒருவர் 'இன்ஜினியர்' என்ற அடையாளத்துடன் வெளி உலகில் உலவுகிறார்,

ஒரு நாட்டை சார்ந்தவர் அந்த நாட்டவராக தம்மை அடையாளம் காட்டுகிறார்,

குலமாகவோ - கோத்திரமாகவோ வாழ்பவர்கள் கூட தங்கள் குலத்தையும் - கோத்திரத்தையும் அடையாளமாக்கிக் கொள்கிறார்கள் எனும் போது இறைவனை அடையும் வழியைப் பெற்றவர்கள் 'இறைவனுக்குக் கட்டுபட்டவன் என்ற அர்த்தத்தில் தம்மை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் என்ன இழப்பு வந்துவிடப் போகிறது?

எனவே ஆன்மீகத் தேடலில் நாம் இறைவனை நேசிக்கிறோம் என்பதை விட இறைவன் நம்மை நேசிக்கிறானா என்பது அர்த்தம் வாய்ந்த கேள்வியாக பிறக்க வேண்டும் அப்போதுதான் ஆன்மீகத் தேடல் ஒரு முழுமைப் பெற்றதாக அமையும். இறைவன் நம்மை  நேசிக்கின்றானா என்ற கேள்வி ஒரு ஆன்மீகவாதியிடம் என்றைக்கு பிறக்கின்றதோ அன்றைக்கே அவன் அதற்கான விடையை கண்டு பிடிக்கும் தேவைக்கு ஆட்பட்டு விடுகிறான். அவனது தேவை பூர்த்தி செய்யப்படும் வழிகாட்டல் குர்ஆனில் அடங்கியுள்ளது.

'(தூதரே) நீர் கூறும், நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் வழியாக) இறைவன் உங்களை நேசிப்பான் என்று'.
............

பாவங்களுக்கு பரிகாரம்.

அடுத்த முக்கியமான பலம் வாய்ந்த கேள்வி. தவறு - பாவம் செய்வதிலிருந்து விடுபட்ட மனிதர்கள் உலகில் எவராவது உண்டா..? 'எவரும் இல்லை' என்பதே பரிசீலிக்க தேவையில்லாத பதிலாகும்.

எது ஒன்றுக்கும் ஒரு எதிர்வினை - எதிர் செயல் இருக்க வேண்டும் என்பது இயற்கை. அப்படி பார்க்கும் போது பாவத்திற்கான எதிர்வினை - எதிர்செயல் என்ன என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும். பாவத்திற்கான எதிர்வினை என்பது விரிவான பதில்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளது.

நாடுகள் - சட்டங்கள் - பாதுகாப்புகள் - அரண்கள் என்ற அனைத்தும் பாவத்திற்கான எதிர்வினையில் முன்னணியில்    வந்து நிற்கும்.

திட்டமிட்ட குற்றங்கள் அனைத்தும் பாவங்களே என்ற அடிப்படையில் இத்தகைய குற்றவாளிகள் அனைவரும் பாவிகளாவர். பாவங்களுக்கு பரிகாரம் என்ன...? 'தண்டனை' என்பதுதான் சரியான சொல் என்றாலும் அதற்காகவே நீதிமன்றங்கள் - சாசனங்கள் - காவல்துறைகள் என்றிருந்தாலும் எல்லா குற்றவாளிகளும் இங்கு அகப்படுவதுமில்லை. பிடிப்படும் அனைவரும் குற்றவாளிகளாகவே இருப்பதுமில்லை. குற்றவாளிகளாகவே இருந்தாலும் குற்றத்திற்கு முறையான தண்டனைகள் கிடைப்பதுமில்லை. இந்த சட்ட விவாதத்திற்குள் நாம் இப்போது செல்ல வேண்டாம். பாவம் செய்துவிட்ட ஒருவன் மனசாட்சியால் உந்தப்பட்டு அதிலிருந்து மீள நினைக்கிறான். ஆன்மீகவாதியாக இருந்தால் பாவத்திற்கு பரிகாரம் என்னவென்று பார்க்கவே செய்வான்.

இத்தகையோருக்கு வழிகாட்டுகிறது இந்த வசனம்.

(தூதரே) நீர் கூறும்: (மனிதர்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் காரணத்தால்) இறைவன் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் என்று..

முஹம்மத் என்ற அந்த மிகப்பெரிய ஆன்மீகத் தலைவரின் வழியாக இறைவனை நேசிப்பவர்கள் - இறைவனால் நேசிக்கப்படுபவர்கள் இவர்களுக்கொரு பரிகார வழிகாட்டல் இருப்பதை இறைவன் இங்கு சுட்டிக்காட்ட தவறவில்லை. இறைவனை அறிந்து அவன் காட்டும் வழியில் வாழ நினைக்கும் ஒருவன் மனிதன் என்ற அடிப்படையில் சிற்சில பாவங்கள் செய்கிறான் என்றால் (அது மனித உரிமை மீறலாக இருக்காத வரையில்) அதை இறைவன் மன்னிப்பதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை. அந்த வகையில் இந்த இறைத்தூதரை பின்பற்றுபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் இந்த வசனம் கூறுகிறது.

இனி, இந்த வசனம் முஸ்லிம்களுக்கு என்ன பாடம் போதிக்கறது என்பதை பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Powered by Blogger