Saturday, April 2, 2011

பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் - வரலாறு - 5


இதுவரை வந்த நான்குத் தொடர்களில் இயேசுவின் தாயார் மரியாள் எந்த ஆணும் தீண்டாத நிலையில் கர்ப்பம் தரிக்க தயாராக வேண்டிய அவசியத்தையும், மன ரீதியாக அவரை இறைவன் தயார் படுத்திய விபரத்தையும் கண்டோம். இனி பைபிள் கண்டுக் கொள்ளாத குர்ஆன் மிக அற்புதமாக சொல்லக் கூடிய இயேசுவின் பால்ய நிலையைக் காண்போம்.
பிறந்த குழந்தை தன் தாயின் களங்கத்தை துடைத்தெறியும் விதமாகவும், தன்னைப் பெற்றெடுத்தத் தாய் எத்துனை புனிதமானவள் என்பதையும் காலாகாலத்திற்கும் மக்கள் விளங்கும் விதத்தில் அற்புதம் செய்தது. ஆனால் இதைப் பற்றி பைபில் கண்டுக் கொள்ளவே இல்லை. ஏன் இந்த வித்தியாசம்? அதை அறிவோம்.
பைபிளில்.

18 இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.
22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான் (மத்தேயு அதிகாரம் 1)

4. அப்பொழுது யோசேப்பும் தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,
5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது.
7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். (லூக்கா அதிகாரம் 2)

இயேசுவின் பிறப்புப் பற்றி அதாவது மரியாள் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்த பொழுதுவரை உள்ள விபரங்களை மத்தேயும் - லூக்காவும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்கள்.

பரிசுத்த ஆவியால் மரியாள் கர்ப்பம் தரித்தாள் என்பதில் சுவிஷேசம் எழுதியவர்களுக்கு மத்தியில் ஒத்த கருத்து உள்ளது. இனி குர்ஆன் இதுபற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்து விட்டு வருவோம்.

குர்ஆனில்.

வானவர்கள் (மரியாளி)மரியமிடம் கூறினார்கள்: நிச்சயமாக இறைவன் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகன் பிறக்கப்போவது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா (மரியாளின் மகன் இயேசு) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3:45)

(மர்யம் இறைவனிடம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?' (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் 'ஆகுக' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.' (அல் குர்ஆன் 3:47)

இறைவன் இதை மட்டும் சொல்லாமல் மேலும் இரு செய்திகளை சொல்கிறான். ஏற்கனவே ஜகரிய்யா வீட்டில் வளர்ந்த மரியம் அவர்கள் உளவியல் ரீதியாக தயாராகி இருந்ததை முந்தைய தொடர்களில் கண்டோம். அதோடு சேர்த்து இறைவனின் இரு சந்தோஷமான செய்திகளும் மரியமை (மேரியை) அடைகின்றது.

1) உலகப் பெண்களில் அவர் சிறந்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டது.

மரியமே! உம்மை இறைவன் தேர்வு செய்து தூய்மையாக்கி உலக பெண்கள் அனைவருக்கும் மேலாக உம்மை சிறப்பித்துள்ளான் என்று வானவர் கூறினார். (அல் குர்ஆன் 3:42)

(உமக்கு பிறக்கும் குழந்தையாகிய அவர்) தொட்டில் பருவத்திலும் இளமையிலும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லவர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார். (அல் குர்ஆன் 3:46)

இந்த உரையாடல்கள் நடந்தப்பின்பு மரியம் கர்ப்பம் தரிக்கிறார். இறைவனின் வல்லமையை அவரது கர்ப்பப்பை உணர்கின்றது. காலங்கள் நகர்கின்றன. மரியமின் கர்ப்பம் அவர் வளர்ந்த வீட்டில் இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில் அதே வீட்டில் மாதவிடாயெல்லாம் நின்று போய் கிழட்டுத் தன்மை தட்டி விட்ட ஜகரிய்யாவின் மனைவி (எலிசபத்து)க்கு யஹ்யா என்ற மகன் பிறந்துள்ளார். கணவனும் மனைவியுமாக இருப்பதால் அவர்களின் குழந்தையை அவர்கள் வாழ்ந்த பகுதி மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்த்திருக்க மாட்டார்கள். முதிர்ந்த வயதில் குழந்தை பிறந்தாலும் இறைவனின் வல்லமை என்று அந்த மக்கள் விளங்கி இருப்பார்கள்.

ஆனால் மரியமைப் பொருத்தவரை அந்தப் பகுதி மக்களுக்கு இந்த நம்பிக்கை வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் திருமணமாகாத கன்னிப் பெண்ணாக இருக்கிறார். இந்த சந்தர்பத்தில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் எந்த மனித கண்ணும், மனமும் அதை வேறுவிதமாகத்தான் நோக்கும். அதனால் மர்யம் அவர்கள் கருவளர்ந்தப் பின்பு பேரீத்தப்பழங்களும் நீரோடையும் உள்ள ஒரு தூரமான இடத்தைப் பார்த்து அங்கு சென்று விடுகிறார்கள். அந்த இடத்தின் நிகழ்வுகளை குர்ஆன் சொல்கின்றது.

கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ''நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். ''கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். ''பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்)நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ''நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவாயாக! (அல் குர்ஆன் 19: 22-26)

இதுவரை,
நாம் கண்ட சம்பவங்களில் பெரிய அளவிளான கருத்து வேற்றுமைகள் எதுவும் இல்லை. மரியமுக்கு மனம் முடிப்பதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தவரைப் பற்றி குர்ஆன் எங்கும் குறிப்பிடவில்லை.
குழந்தை வழியாக மரியம் மிகப் பெரிய அளவில் சிறப்பிக்கப்படவிருப்பதால் மற்ற சாதாரண விஷயங்களை இறைவன் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

இனி பைபிள் கண்டுக் கொள்ளாத, குர்ஆனில் மட்டுமுள்ள இயேசுவின் முதல் அற்புதத்தையும் அதனால் மரியாளுக்கு ஏற்பட்ட உலகச் சிறப்பையும் பார்ப்போம்.

பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையுடன் தன் சமூகத்திற்கு மரியம் திரும்பினார். திருமணமாகாத ஒரு கன்னிப் பெண் அதிலும் நல்லக் குடும்பத்தில் பிறந்தப் பெண் கைக்குழந்தையுடன் வருவதைக் கண்ட அந்த பகுதி மக்கள்,

.(பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். ''மர்யமே! விபரீதமான ஒரு காரியத்தைச் செய்து விட்டாயே?'' என்று அவர்கள் கேட்டனர். (அல் குர்ஆன் 19:27)
 
''ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை'' (என்றனர்)( அல்குர்ஆன் 19:28).
 
அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! ''தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?'' என்று அவர்கள் கேட்டார்கள் (அல் குர்ஆன் 19:29).

அந்தப் பகுதி மக்கள் வெளிபடுத்திய வார்த்தைகளிலிருந்து மரியாளின் குடும்பம், அவர் வளர்ந்தக் குடும்பம் எத்துனை கண்ணியமான குடும்பமாக இருந்துள்ளது என்பதை விளங்கலாம். அத்தகைய சிறப்பான குடும்பத்தில் பிறந்த - வளர்ந்த ஒரு கன்னிப் பெண் திருமணம் ஆகாத நிலையில் கையில் குழந்தையுடன் வந்து நிற்கிறார். இப்போது அந்த மக்களின் தூற்றலுக்கும் நக்கல் பேச்சுக்கும், குத்தலுக்கும் யாரால் பதில் சொல்ல முடியும? அந்த சந்தர்பத்தில் 'தான் குற்றமற்றவள்' என்று மரியாள் எத்துனை வலுவாக வாதாடினாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல என்றைக்கும் எவரும் அந்த வார்த்தையை பொருட்படுத்தவே மாட்டார்கள். ஏனெனில் உலக நடப்பும் சூழ்நிலையும் அப்படி.

மரியம் தன் நிலையை எவ்வளவு விளக்கினாலும் அதை பிற மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் தான் இறைவன் மரியாளை 'நீ பேச வேண்டாம்' என்று சொல்லி விட்டான். அந்த சந்தர்பங்களில் மரியாள் பேசுவது அர்த்தமற்றதாகவே கருதப்படும். 'தவறையும் செய்து விட்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்டு, எப்படி வீண் விதண்டாவாதம் செய்கிறாள்' என்றுதான் சமுதாயம் தூற்றும். அதனால் அந்த சந்தர்பத்தில் மரியம் வாய் மூடி மெளனமாக இருப்பதே அறிவார்ந்த செயலாகும். இறைவன் மிகத் தெளிவாக இதை மரியாளுக்கு உணர்த்தி விட்டான்.

தான் குற்றமற்றவள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அது தான் பெற்ற குழந்தை அதை உலகிற்கு உணர்த்தும் என்பதை இறைவனின் அறிவிப்பால் உணர்ந்திருந்த மரியாள் அந்த மக்களின் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக குழந்தையின் பக்கம் செய்கை செய்கிறார். மரியமுக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்த அந்த மக்களுக்கு ஆச்சரியம். நாங்கள் உன்னிடம் கேள்விக் கேட்டால் நீ குழந்தையை காட்டுகிறாயே.. தொட்டில் குழந்தையிடம் நாம் எவ்வாறு பேசுவோம்? என்று கேட்கிறார்கள். அப்போதுதான் அந்த அற்புதம் நடக்கின்றது.

மரியம் சுமந்து வந்த அந்தக் குழந்தைப் பேசுகின்றது.

நான் கர்த்தரின் அடிமையாக இருக்கிறேன். அவர் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கி இருக்கிறார். நான் எங்கிருந்தாலும் என்னைப் பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கி இருக்கிறார். நான் உயிருடன் இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுதுவருமாறும், ஜக்காத் (என்ற பொருளாதார பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன். நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், மீண்டும் உயிர் பெற்று எழும் நாளிலும் என்மீது சாந்தி நிலவும் என்று அந்தக் குழந்தைக் கூறிற்று. (அல் குர்ஆன் 19:30,31,32,33)

பச்சிலங்குழந்தையான இயேசு தனது முதல் பேச்சிலேயே ஏராளமான விபரங்களை கூறியுள்ளார். அதை அறியுமுன் பவுலால் தொகுக்கப்பட்டு இயேசுவின் புத்தகம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைபிளில் இவ்வளவு பெரிய அற்புதம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
உலகில் எங்குமே இதுவரையும் நடக்காத ஒரு அற்புதத்தை இயேசுவின் குழந்தைப் பருவம் அதிலும் பிறந்த சில நாட்களில் நடத்துகின்றது. இதை பைபிள் கண்டுக் கொள்ளவில்லை. திருமணமாகத கன்னிப் பெண் குழந்தைப் பெற்றெடுக்கிறாள் என்றால் நிச்சயம் சமூகம் தூற்றவே செய்யும். மரியாளுக்கு ஏற்பட்ட இந்த நிலையை அவர் எப்படி எதிர் கொண்டு தன்னை தூய்மையான பெண் என்பதை மக்கள் முன்னிலையில் நிரூபித்தார் என்ற விபரம் எதுவும் பைபிளில் கிடைக்கவில்லை.

மரியாள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிக்கிறார் என்ற செய்தி சாதாரண ஒன்றல்ல. பைபிளின் வரலாறுபடி மரியாளுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த யோசேப் என்ற கணவர் திருமணத்திற்கு முன் தனக்கு பேசிவைத்திருந்த பெண் கர்ப்பம் தரிக்கிறாள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாமல் அவளை தள்ளி விட (திருமணம் செய்யாமல் புறக்கணித்து விட வேண்டும்) என்று மனதிற்குள் எண்ணிய விபரத்தை பைபிள் கூறுகின்றது.

18 மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். (மத்தேயு)

இந்நிலையில் தான் தேவத்தூதர்கள் யோசேபை சந்தித்து மரியாளின் நிலவரத்தைக் கூறுகிறார்கள். யோசேபு பிறகு சமாதானமடைகின்றார். யோசேபின் நிலையே இதுவென்றால் ஊர் மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஊர் மக்களைப் பற்றி பைபிள் கண்டுக்கொள்ளவே இல்லை.

இயேசுவின் சிறப்பையும், மரியாளின் கற்பொழுக்கத்தையும் திருக்குர்ஆன் மட்டுமே உலகிற்கு தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இயேசு வளர்ந்து பெரியவராக ஆன பின் செய்த பல அற்புதங்களை விட பச்சிலங்குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம் தான் மிகப் பெரியதாகும். வளர்ந்தப்பின் செய்யுமம் அற்புதங்களுக்கு வேறு அர்த்தம் கற்பித்து விடலாம். இயேசுவின் அற்புதம் உட்பட பல இறைத்தூதர்களின் அற்புதங்களுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் வெவ்வேறு அற்புதம் கற்பித்தார்கள் என்பது பைபிள் உட்பட கூறும் வரலாற்று உண்மையாகும். அதே சமயம் குழந்தை செய்யும் அற்புதத்திற்கு யாரும் வேறு அர்த்தம் கற்பிக்க முடியாது. அது கலப்படமற்ற அற்புதமாகவே உலகிற்கு தெரியும். அப்படிப்பட்ட ஒரு அற்புதம் தான் இயேசுவின் குழந்தைப்பருவத்தில் நிகந்து அவர் அந்தப்பகுதி மக்களிடம் பேசியதாகும். இந்தப் பேச்சு அவரை இறைத்தூதர் என்றும் அவரது தாயார் மரியாள் கற்பு நெறித் தவறாத தூய்மையான பெண் என்றும் உலகிற்கு உணர்த்தியது. இன்றுவரையிலும் உலகின் இறுதிநாள் வரையிலும் அந்த அற்புதம் குர்ஆனில் பேசப்படுகின்றது. இந்த அற்புதத்தை பைபிள் கண்டுக்கொள்ளவில்லை.

இயேசுவின் முதல் பேச்சு குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது என்று குர்ஆன் சொல்லும் போது பைபிள் முதல் பேச்சை எப்படி சொல்கின்றது என்பதைப் பாருங்கள்.

அவருக்கு பனிரெண்டு வயதானபோது அவர்கள் அந்த பண்டிகை முறைமையின் படி எருசலேமுக்குப் போய்.......அப்போது அவருடைய தாயார் அவரை நோக்கி மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் இதோ உன் தகப்பனும் நானும் விசாரத்தோட உன்னைத் தேடினோமே என்றாள். அதற்கு அவர் 'நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா என்றார். (லூக்கா 42-49)

பைபிளின் நான்கு சுவிசேசக்காரர்களின் தொகுப்பிலும் இயேசுவின் முதல் பேச்சு இந்த இடத்தில் தான் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இயேசு தனது பணிரென்டு வயதுக்கு முன் பேசிய எந்த விபரமும் கிடைக்கவில்லை.

பைபிளை மட்டுமே நம்பிக்கொண்டு திருக்குர்ஆன் பற்றிய எந்த சிந்தைனையுமில்லாத கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசுவின் சரியான வரலாறு எங்கு கிடைக்குமென்று.

குழந்தைப் பருவத்தில் இயேசு பேசிய வார்த்தைகள் அதன் ஆழம் அதிலிருந்து வேறுபடும் இன்றைய கிறிஸ்த்துவம் இனி அதுபற்றிப் பார்ப்போம். இறைவன் நாடட்டும்.

மரியாள் கர்ப்பம் - குர்ஆன் - பைபிள் - வரலாறு - 4

பைபிள் என்பது கிறிஸ்துவர்களின் நம்பிக்கைப்படி வேத புத்தகமாகும். அவர்களுக்குள் இருக்கும் இரு பெரும் பிரிவினரான கத்தோலிக்க பிரிவினரிடம் உள்ள பைபிளுக்கும் - மற்றொரு பிரிவினரான புராட்டஸ்டண்ட் பிரிவினரிடம் உள்ள பைபிளுக்கும் நிறைய வேறுபாடுகள் ஆகமங்களில் கூடுதல் குறைவு வரலாற்று முரண்பாடுகள் ஆகியவை உள்ளன. நாம் இங்கு எடுத்துக் காட்டும் பைபிள் வசனங்கள் அனைத்தும் இந்திய வேதாகம சங்கம் பெங்களுர் என்ற முகவரியுடன் வெளியிடப்பட்ட பைபிளிலிருந்துதான் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

புதிய ஏற்பாட்டின் முந்தய நான்கு சுவிசேஷங்கள் மத்தேயு - மார்க்கு - லூக்கா - யோவான் ஆகியவையாகும். இந்த நான்கு புத்தகங்களும் இயேசுவின் வரலாற்றை கூறுவதற்காக எழுதப்பட்டவையாகும். இவற்றில் மத்தேயும் - லூக்காவும் இயேசுவின் வம்சங்களைப் பற்றி தலைமுறை விபரங்கள் உட்பட கூறியுள்ளார்கள். (மத்தேயு குறிப்பிடும் தலைமுறைப்பட்டியல் பின்னர் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. காரணம் இயேசுவின் பரிசுத்தத்தன்மையi கேள்விக்குறியாக்கும் விபரமும், தலைமுறைகளின் கால அளவு கோளாறுகளுமேயாகும்)

இயேசுவின் வரலாற்றை தெரிந்துக் கொள்வதற்கு இவர்கள் குறிப்பிடும் தலைமுறைகளை ஓரளவு அறிந்துக் கொள்வது நல்லது.

மத்தேயு - அதிகாரம் ஒன்று.

ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு.

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான், ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான், யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரனையும் பெற்றான். யூதா பாரேசையும், சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான், என்ரோம் அராமைப் பெற்றான். ஆராம் அமினதாபைப் பெற்றான், அம்மினத்தாப் நாகசோனைப் பெற்றான், நாகசோன் சால்மோனைப் பெற்றான். ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான், தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலமோனைப் பெற்றான். இப்படியாக தொடரும் வம்ச பட்டியலில்,

எலியூத் எலேயாசாரைப் பெற்றான், அவன் மாத்தாளைப் பெற்றான், மாத்தான் யாக்கோபைப் பெற்றான், யாக்கோபு மரியாளின் புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான், அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் அபிராம் முதல் தாவீது வரை பதினாலு தலைமுறைகளும் தாவீது முதல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். (ஆரம்ப பதினேழு வசனங்கள்)

இயேசு கிறிஸ்த்துவினுடைய ஜனனத்தின் விபரமாவது அவருடைய தாயாகிய மரியாள் யோசோப்புக்கு நியமிக்கபட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனமில்லாமல் இரகசியமாக அவளை தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு 'தாவீதின் குமாரனாகிய யேசேப்பே! உன் மனைவியாகிய மரியளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே. அவளிடத்தில் உற்பத்தியாகி இருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

தீர்க்கதரிசிகளின் மூலமாய் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும் படி இதெல்லாம் நடந்தது.

அவன் இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். (அதிகாரம் ஒன்று முடிய உள்ள வசனங்கள்)

லூக்கா வரலாற்றை எப்படி ஆரம்பிக்கிறார் பாருங்கள்

மகா கனம் பொருந்திய தெயோப்பிலுவே நாங்கள் முழு நிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,
ஆரம்ப முதல் கண்ணார கண்டு வசனங்களை போதிக்கிறவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தப்படியே அவைகளை குறித்து அனேகம் பேர் சரித்திரம் எழுத ஏற்பட்டப்படியினால்,
ஆரம்ப முதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தரிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விஷேஷங்களில் நிச்சயமாய் நீ அறிய வேண்டும் என்று,
அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய் தோன்றிற்று
. (லூக்கா ஆரம்ப நான்கு வசனங்கள்)

அபியா எனும் ஆசாரிய வகுப்பில் சகரிய்யா என்ற பெயர் கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் எலிசபத்து.

எலிசபத்து மலடியாய் இருந்தபடியால் அவளுக்கு பிள்ளையில்லாமலிருந்தது. இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.

கர்த்தருடைய தூதன் ஒருவன் தூப பீடத்தின் வலது பக்கம் நின்று அவனுக்கு தரிசனமானான்.

சகரிய்யா அவனைக் கண்டு கலங்கி பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி சகரிய்யாவே பயப்படாதே. உன் மனைவி எலிசபத்து உமக்கு ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக.

அவன் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாய் இருப்பான். திராட்சை ரசமும் மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்;. (லூக்கா 5 - 15 வசனங்கள்.)

இயேசுவின் வரலாற்றை பைபிளிலிருந்து தெரிந்துக் கொள்ள பைபிள் கூறும் வம்சா வழி தலைமுறைகளை ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த பட்டியலின் விபரத்தையும் கண்டோம்

உலகில் ஒரு பெரும் சமூகத்தினரால் மிக முக்கியமானவராக கருதப்படும் இயேசுவின் உண்மை நிலைகளை தெரிந்துக் கொள்வதற்காக இந்த தொடர் எழுதப்படுகிறது. கிறிஸ்தவர்களில் ஒருசாராரின் நம்பிக்கைப்படி இயேசு கிறிஸ்து கடவுளின் மகனாக போற்றபடுகிறார். முஸ்லிம்கள் இதை மறுத்து இயேசு கடவுளின் குமாரனல்ல அவர் மிக சிறந்த ஒரு தேவ தூதர் - கடவுளால் அனுப்பபட்ட தூதர் என்கின்றனர். நேர் எதிரான இந்த முரண்பாட்டை களைய வேண்டுமானால் இரு கருத்துடையவர்களும் அவரவர்களும் புனிதமாக கருதும் வேதங்களிலிருந்துதான் முயற்சிக்க வேண்டும். அந்த அடிப்படையில் இயேசு பற்றி குர்ஆனிலும் பைபிளிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருமணம் செய்யாமல் - கன்னிக் கழியாமல் இருந்த மரியாளும், திருணம் செய்து குழந்தைப் பேறு இல்லாமல் முதிர்ந்த வயதை அடைந்து மாதவிடாயெல்லாம் நின்று போன கிழ வயதிலிருந்த சகரிய்யாவின் மனைவி எலிசபத்தும் ஒரே நேரத்தில் - சில மாத இடைவெளியில் (பைபிள்) கர்ப்பம் தரிக்கிறார்கள். மரியாளைப் பார்த்து சுப செய்தி சொன்ன அதே வானவர் சகரிய்யாவிற்கும் சுப செய்தி சொல்லி செல்கிறார்.

லூக்காவின் வராலாறு தொடர்கிறது.

தாவீது வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையிடத்திற்கு தேவனாலேயே அனுப்பட்ட தூதன் வந்தான். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.

அவளிருந்த விட்டில் அவன் பிரவேசித்து கிருபைப் பெற்றவளே வாழ்க, கர்த்தர் உன்னுடன் இருக்கிறார் ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசிர்வதிக்கப்பட்டவள் என்றான்.

நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராய் இருப்பார் உன்னதமானவருடைய குமாரன் எனப்படுவார். கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தை என்றென்றும் அரசாளுவார் அவருடைய ராஜ்யத்திற்கு முடிவிராது என்றான்.

அதற்கு மரியாள் தேவ தூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

தேவ தூதன் அவளுக்கு பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். அதனால் உன்னிடம் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும். (லூக்கா அதிகாரம் 1 வசனங்கள் 27 - 35)

முந்தய தொடரில் இயேசுவின் பிறப்புப் பற்றி குர்ஆனில் சொல்லப்பட்ட விபரங்களை கண்டோம். பைபிளில் லூக்கா மட்டுமே மேற்கண்ட விபரங்களை கூறுகிறார். மாற்கு - மத்தேயு - யோவானில் இந்த விபரங்கள் கூறப்படவில்லை.

இயேசுவின் குழந்தை அற்புதம் பற்றி பைபிளில் எங்குமே சொல்லப்படவில்லை. ஆனால் குர்ஆன் அதை மிக அற்புதமாக விவரிக்கின்றது. அந்த அற்புதங்களை விரிவாக அறியுமுன் மரியாளுக்கு சொல்லப்பட்ட சுப செய்தி பற்றிய வார்த்தைகளின் ஆழத்தை நாம் விளங்குவோம்.

தேவ தூதர் மரியாளுக்கு சுப செய்தி கூறுகிறார். இது எப்படி சாத்தியம் நான் புருஷனைப் பெற்றிருக்கவில்லையே என்கிறார் மரியாள். பரிசுத்த ஆவி உன்மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும் என்பது தேவதூதன் மரியாளுக்கு சொன்ன வார்த்தை. இது லூக்காவின் விபரம். (மற்ற சுவிசேஷங்களில் இது கூட இல்லை)

ஆனால் இதே விபரத்தை குர்ஆன் கூறும் போது மிகுந்த பொருள் பொதிந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இயேசு பற்றிய அற்புதத்தை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறது.

எந்த ஆணும் என்னை தீண்டாமலும், நான் நடத்தைக் கெட்டவளாக இல்லாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும்? என்று மரியாள் கேட்கிறார். (அல் குர்ஆன் 19:20)

அது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21)

இது எப்படி சாத்தியமாகும். குழந்தை உருவாக வேண்டுமானால் ஒன்று எனக்கு திருமணம் முடிந்திருக்க வேண்டும். அல்லது நான் தவறி இருக்க வேண்டும். இரண்டும் நடக்காத போது குழந்தை உருவாவது என்பது எப்படி சாத்தியம் என்பது மரியாளின் சந்தேகம்.

பரிசுத்த ஆவி உன்மேல் இறங்கும். தேவனின் பலம் உன்மேல் நிழலிடும் என்று பைபிள் கூறிவிடுகிறது.

குர்ஆன்,

அது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21) என்று கூறுகிறது.

இதில் இயேசுவை 'மக்களுக்கு சான்றாகவும், அருளாகவும்' ஆக்கப்போவதாக கர்த்தர் குறிப்பிடும் வார்த்தை இடம் பெறுகிறது.

மக்களுக்கு சான்றாக அவர் ஆக்கப்பட்டுள்ளார் என்றால் என்ன?

தந்தையில்லமல் பிறந்தது, தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியது (இது பின்னர் வருகிறது) இறந்தவர்களை உயிர்பித்தது உட்பட பல அற்புதங்களை செய்து காட்டியது, இன்றளவும் உயிரோடு வாழ்வது என்று பற்பல அத்தாட்சிகள் அவரிடம் இருக்கின்றன. சமீபத்திய உலகிற்கு கூட அவர் ஒரு அத்தாட்சியாக்கப்பட்டுள்ளார் சிந்திக்கும் போது விளங்கலாம்.

ஆம் குளோனிங் என்ற நகல் உயிரியின் உருவாக்கத்தை மனிதன் நிகழ்த்திக்காட்டி ஆண்டுகள் சில கடந்து விட்டன.

ஆண் உயிரினமும், பெண் உயிரினமும் இணைந்து அவற்றின் உயிரணுவும், சினை முட்டையும் இரண்டற கலப்பதின் வழியாகத்தான் ஒரு புதிய உயிர் உருவாகும் என்பதுதான் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மனித வரலாற்றில் நிலைத்திருந்த நம்பிக்கையும் ஆதாரமுமாகும்.

ஆணோடு பெண்ணோ, பெண்ணோடு ஆணோ சேராவிட்டால் ஒரு புதிய உயிர் - புதிய குழந்தை - உருவாகும் என்று கற்பனைக் கூட செய்து பார்த்திராமல் தான் மனிதன் கடந்த காலம் வரை வாழ்ந்து வந்துள்ளான்.

மனிதனின் இந்த சிந்தனையோட்டத்தை மாற்றியமைத்து ஒரு புதிய புரட்சியை உருவாக்கிக் காட்டினார் ஆஸ்த்ரேலிய விஞ்ஞானி.

உயிரணுவும், சினை முட்டையும் இணைவது என்ற நிலையை மாற்றி சினை முட்டையுடன் மரபணுவை இணைத்து ஒரு புதிய உயிரை (டோலி என்ற ஆட்டுக்குட்டியை) உருவாக்கி உலகில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அந்த ஆஸ்த்ரேலிய விஞ்ஞானி. அதன் மீது கடும் விவாதங்களும் சர்ச்சைகளும் நடந்த வண்ணம் இருந்தாலும் இரண்டு பாலினங்கள் உறவு கொள்ளாமல் - கலக்காமல் - ஒரு பாலினத்திலிருந்தே புதிய உயிரியை உருவாக்கும் பணி உலகில் வேகமாக நடந்துக் கொண்டிருக்கிறது.

அந்த ஆட்டுக்குட்டியை தொடர்ந்து மாடு, குரங்கு, நாய் என்று பல உயிரினங்களை நகல் உயிரியாக மேலை நாட்டவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறையில் புதிதாக மனிதனை உருவக்குவதற்கு கடின எதிர்ப்பு உலகில் நிகழ்ந்தாலும் நகல் மனிதனை உருவாக்கும் முயற்சியில் அமேரிக்கா விஞ்ஞானிகள் ஈடுபட்டார்கள். சமீபத்தில் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது.

எப்படி சாத்தியம்?

எந்த ஒரு ஆணாக இருந்தாலும் சரி அவனிடம் நூறு சதவிகிதம் ஆண் தன்மை இருப்பதில்லை. அதே போன்று தான் பெண்ணும். எந்த ஒரு பெண்ணிடமும் நூறு சதவிகிதம் பெண் தன்மை இருப்பதில்iலை. ஆண் பெண் இரண்டற கலந்து புதிய உயிர் உருவாவதால் புதிய உயிருக்கு இரண்டு பாலினங்களின் தாக்கமும் இருக்கவே செய்யும் என்பது இன்றைக்கு சாதாரண உண்மை.

பெண்களின் உடலில் ஆணினம் சார்ந்த மரபணுக்களும், ஆண்களின் உடலில் பெண்ணினம் சார்ந்த மரபணுக்களும் இருக்கவே செய்கின்றன. பெண்ணிடம் உள்ள ஆண் சார்ந்த மரபணுவை கண்டரிந்து எடுத்து அதே பெண்ணிடம் உள்ள சினை முட்டையுடன் இணைத்தால் என்னவாகும்? மரபணு சார்ந்த ஒரு புதிய குழந்தை உருவாகி விடும். அதாவது ஆணோடு உறவு கொள்ளாமலே மரபணு குழந்தைக்கு ஒரு பெண்ணால் தாயாக முடியும். இதுவே நகல் உயிரி பற்றிய ஆராய்சியின் வளர்ச்சி நிலையாக உள்ளது.

1990களின் இறுதியில் உலகை கலக்கிய ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பை 'இது நடந்தே தீரும் ஆனால் நீண்ட காலம் பிடிக்கும் இது நடக்கும் என்பதற்கு இயேசு ஒரு அத்தாட்சியாவார்' என்பது போன்ற பல உண்மைகளை வெளிபடுத்தும் விதமாகவே குர்ஆனில் மரியாளுக்கு சுப செய்தி சொல்லப்பட்ட வாசக அமைப்புகள் அமைந்துள்ளன.

'நானும் கெட்டுப்போகாமல் இருக்கும் போது, எனக்கு திருமணமும் நடக்காத நிலையில் எனக்கு எப்படி குழந்தை பிறக்கும்...' என்பது மரியாளின் ஆச்சர்யம் கலந்த வினா.

'அது அப்படித்தான் எனக்கு இது மிக எளிதானது' என்பது கர்த்தரின் பதில்.
மரியாளின் கேள்விக்குரிய சரியான பதில் தானா இது?.

சிலருக்கு சில நேரம் மிக அழுத்தமான கேள்விகள் பிறந்தாலும் அதற்குரிய பதிலை கிரகிக்கக் கூடிய, சொல்லும் பதிலை ஆய்ந்துணரக் கூடிய நிலையில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.

தாயின் வயிற்றில் வளரும் குழந்தை குறித்து 'இந்த பாப்பா உன் வயிற்றில் எப்படிமா வந்தது' என்று வீட்டில் உள்ள மற்ற சிறுவர்களோ, சிறுமிகளோ கேட்கிறார்கள் என்றால் அவர்களைப் பொருத்தவரையில் அந்த கேள்வி அழுத்தமானக் கேள்விதான். ஆனால் அதற்குரிய பதிலை அவர்களிடம் சொன்னால் அவர்களால் அதை புரிந்துக் கொள்ள முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.

அந்த சந்தர்பங்களில் 'அது அப்படித்தான் இறைவன் கொடுத்துள்ளான்' என்று தாய் பதில் சொல்லி விடுவாள்.

சொல்லக் கூடிய பதில் கேள்வி கேட்டவருக்கு புரியக் கூடிய நிலை இருந்தால் மட்டுமே பதில் வெளிப்படுவதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

மரியாளின் கேள்வி ஆழமானதுதான் என்றாலும் உயிரணு என்றால் என்ன, சினை முட்டை என்றால் என்ன, மரபணு என்றால் என்ன என்ற உடலியல் பற்றிய தெளிவெல்லாம் மரியாளுக்கு இருந்திருக்காது.

அதி நவீன விஞ்ஞான யுகமாக கருதப்படும் இந்த காலத்தில் கூட மாதவிடாய் ஏற்படுவதற்கு கருமுட்டையின் சிதைவுதான் காரணம் என்பது ஏராளமான பெண்களுக்கு தெரிவதில்லை. உதிரப் போக்கிற்கும் மாதவிடாய்கும் உள்ள வித்தியாசங்களை - காரணங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

இன்றைக்கே இதுதான் நிலைமை என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலமை எப்படி இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

மரியாளின் கேள்வி அழுத்தமானதுதான் என்றாலும் பதிலை புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை என்பதால் அவர் புரியும் விதத்தில் பதில் சொல்லப்படவில்லை.

அறிவு முதிர்ச்சிப் பெற்றவர்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் பதில் முன் வைக்கப்பட்டது.

அது அப்படித்தான், எனக்கு இது மிக இலகுவானது என்கிறான் இறைவன்.

என்னால் மட்டுமே முடியும் என்று கூறாமல் எனக்கு இலகுவானது என்று கூறுவதன் வழியாக பிறராலும் செய்ய முடியும் ஆனால் அவ்வளவு சுலபமாக செய்து விட முடியாது நிறைய கால கட்டங்கள் அதற்கு தேவைப்படும் என்பது போன்ற அர்த்தங்கள் எல்லாம் பொதிந்த நிலையில் தான் அந்த வார்த்தையை கர்த்தர் - இறைவன் பயன்படுத்தியுள்ளான் என்பது அறிவாளிகளின் சிந்தனைக்கு எட்டவே செய்யும்.

ஆணிண் உயிரணுவின்றி, ஆண் துணையின்றி பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்பதை மனிதன் கண்டறிய இயேசுவிற்கு பிறகு இரண்டாயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.

'எனக்கு இலகுவானது' என்பதை தொடர்ந்து 'மனிதர்களுக்கு அவரொரு அத்தாட்சியாவார்' என்ற அற்புத செய்தியும் சொல்லப்பட்டுள்ளது.

இயேசுவின் பிறப்புடன் சேர்த்து அவர் மனிதர்களுக்கு சான்றாவார் என்று சொல்லப்பட்டதிலிருந்து அவரை மாடலாக கொண்டு தந்தையின்றி உயிர்களை உருவாக்க முடியும் என்ற உண்மையை இயேசுவின் பிறப்பு வழியாக இறைவன் உலகிற்கு சொல்லி வைத்துள்ளான் என்பதை விளங்கலாம். (குர்ஆன் மட்டுமே இந்தச் செய்தியைச் சொல்கின்றது)

இயேசு குலோனிங் முறையில் தான் பிறந்தார் என்று நாம் அறுதியிட்டு கூறுவதாக யாரும் நினைத்துவிட வேண்டாம். அவர் மரபியல் வழியாகவோ அல்லது இன்னும் அற்புதமான முறையிலோ உருவாகி இருக்கலாம். நாம் சொல்லவருவது என்னவென்றால் உலகம் வியந்து பார்க்கும் ஒரு விஞ்ஞான மாற்றத்திற்கு இயேசுவின் பிறப்பு மிக சரியாக பொருந்தி போகிறது என்பதைதான்.

இயேசுவின் உள்ளே பொதிந்து கிடக்கும் இந்த சான்றுகளை இயேசுவிற்காக எழுதப்பட்டதாக நம்பப்படும் பைபிளின் எந்த பகுதியிலும் பார்க்கவே முடியாது. அவரது பிறப்பு ஒரு அத்தாட்சியாகும் என்ற வார்த்தைக் கூட பைபிளின் புதிய ஏற்பாடுகளில் இடம் பெறவில்லை.

குர்ஆன் மட்டுமே அவரது பிறப்பை உலகிற்கோர் சான்றாக்கி இன்றைய விஞ்ஞான யுகத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளது என்பதை அன்பான கிறிஸ்த்துவ சகோதர - சகோதரிகள் உணர வேண்டும்.

இயேசுவின் அத்தாட்சி முடியவில்லை. பைபிளில் சொல்லப்படாத - குர்ஆனில் மட்டுமே சொல்லப்பட்டு உள்ளம் சிலிர்க்க வைக்கும் அவரது குழந்தைப் பருவ அற்புதங்களை அடுத்து பார்ப்போம்.

மனோதத்துவ ரீதியில் மரியாள் உருவாக்கப்படுதல் - வரலாறு 3

யூத சமுகத்தின் கொடிய மனப்பான்மை - மரியாள் தாயாரின் மனநிலை - மரியாளின் பிறப்பு வளர்ப்பு ஆகியவற்றை முந்தய இரு தொடர்களில் கண்டோம்.

அற்புதங்கள் நிறைந்த ஒரு தூதரை யூதர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு படிப்படியாக இரண்டு தலைமுறைக்கு முன்பிருந்த நடக்க துவங்கி விட்டதை ஜகரிய்யா மற்றும் மரியாளின் வாழ்க்கை சம்பவங்களிலிருந்து நாம் விளங்கலாம்.

மரியாளை மனோதத்துவ ரீதியில் உருவாக்குவதற்காக அவரை ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்டதை கூறி இரண்டாம் தொடரை முடித்திருந்தோம்.

மரியாளை மனோதத்துவ முறையில் உருவாக்க வேண்டிய அவசியம்.

குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் உடலுக்கு தேவையான பாலியல் வேட்கைகள் அதை தணித்துக் கொள்ள தேவையான வழிமுறைகள் - தேடல்கள் இவை மனித சமுதாயத்திற்கு பொதுவானது தான் என்றாலும் குழந்தைகள் வளரும் - வளர்க்கப்படும் சூழ்நிலையை பொருத்து இந்த இயல்புடைய தாக்கங்களில் வித்தியாசம் ஏற்படத்தான் செய்யும்.
கட்டுக் கோப்பான சூழ்நிலையில் (கட்டுக் கோப்பான சூழ்நிலை என்பது அடக்குமுறையான சூழ்நிலை என்று யாரும் புரிந்துக் கொள்ளக் கூடாது) வளரும் குழந்தைகள் ஆணாகட்டும் - பெண்ணாகட்டும் அவர்களிடம் ஒழுக்கங்கள் மிகைத்தே காணப்படும். எந்த ஒரு தவறையும் செய்வதற்கு உள்ளம் இடங் கொடுக்காது. மானக்கேடான காரியங்களை செய்வதற்கு உள்ளமும் - உடலும் கூசும்.

மரியாள் ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் வளர்கிறார். இறைத்தூதரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் என்றால் வளரும் விதம் பற்றி சொல்லி தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மிகுந்த ஒழுக்க மாண்புகளுடன் வளரும் மரியாளுக்கு திருமணத்திற்கு முன்பே - எந்த ஆணும் அவரை தீண்டாத நிலையில் - குழந்தை உருவாக வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு. மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்த ஒருவருக்கு இந்த சோதனையை எதிர்கொள்ள முடியுமா... மனம் இடங்கொடுக்குமா...

கணவன் - மனைவி இணைவதன் வழியாகவே குழந்தை உருவாக முடியும் என்று அறிந்து வைத்திருந்த ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு ஆணும் தீண்டாமலேயே குழந்தை உருவாகும் என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

இந்த கேள்விக்கான விடையை ஜகரிய்யா என்ற இறைத்தூதரின் வாழ்விலிருந்து மரியாள் பெறுகிறார்.

மரியாள் ஜகரிய்யா அவர்களிடம் வளரும் போது தள்ளாத வயதை அடைந்த நிலையிலும் ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. தனக்கு ஒரு வாரிசு தேவை என்ற ஆவல் மட்டும் அவர்களுக்கு குறையவில்லை. இந்நிலையில் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் கிடைப்பதையும் அது இறைவன் புறத்திலிருந்து வருகிறது என்பதையும் ஜகரிய்யா அறிந்து தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற முறையீட்டை இறைவனிடம் வைக்கிறார்.

இறைவா உன்னிடமிருந்து எனக்கு ஒரு தூய குழந்தையை கொடுத்தருள்! நீ வேண்டுதலை செவியேற்பவன் என்று ஜகரிய்யா பிரார்த்திக்கிறார்கள் (அல் குர்ஆன் 3:38)

அவர் தொழும் இடத்தில் தொழுதுக் கொண்டிருக்கும் போது வானவர்கள் 'யஹ்யா' என்ற குழந்தையைப் பற்றி நற்செய்தி கூறுகிறார்கள். இறைவனின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். இறைத்தூதராகவும் - தலைவராகவும் - ஒழுக்கக்காரராகவும் - நல்லவராகவும் அவர் இருப்பார் என்று செய்தி சொல்கிறார்கள். (அல் குர்ஆன் 3:39)

எனக்கு முதுமை வந்து விட்ட நிலையிலும், என் மனைவி மலடியாக உள்ள நிலையிலும் இறைவா எனக்கு எப்படி குழந்தை உருவாகும்? என்று ஜகரிய்யா கேட்கிறார். தான் நாடியவற்றை இறைவன் இப்படித்தான் உருவாக்குவான் என்று இறைவனின் பதில் கிடைத்தது (அல் குர்ஆன் 3:40)
இந்த விபரங்கள் மேலதிக வார்த்தைகளுடன் மரியாள் என்ற 19வது அத்தியாயத்திலும் கூறப்படுகிறது.

ஜகரிய்யா தம் இறைவனை இரசகியமாக அழைத்து பிரார்த்தித்தார். என் இறைவனே! என் எலும்புகள் பலவீனப்பட்டு - என் தலை நிறைத்து கிழவனாகி விட்டேன். உன்னிடம் வேண்டுவதில் நான் என்றைக்கும் துர்பாக்கியம் அடைந்ததில்லை. எனக்கு பின் என் உறவினர் குறித்து அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளை பெரும் பாக்கியத்தை இழந்து நிற்கிறாள். எனக்கு ஒரு பொறுப்பாளரை ஏற்படுத்து.

ஜகரிய்யாவே! உமக்கு ஒரு நற்செய்தி, யஹ்யா என்ற மகன் உனக்கு பிறக்கிறார் இப்பெயர்கொண்டவர்கள் இதற்கு முன் பிறந்ததில்லை என்றான் இறைவன்.

இறைவா! எனக்கு எப்படி புதல்வன் பிறப்பான்! நானோ முதுமையின் இறுதியை அடைந்து - என் மனவியோ மலடு தட்டிப்போய் விட்ட நிலையில் என்றார்.

அது அப்படித்தான். எனக்கு அது எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாத நிலையில் நான் உம்மை படைத்தேன் (என்பதை நினைவு கூறும்) என்றான் இறைவன்.

எனக்கொரு அடையாளத்தை காட்டு இறைவா! என்றார் ஜகரிய்யா. 'எந்த குறைப்பாடும் உம்மிடம் இல்லாத நிலையிலும் நீர் மூன்று நாட்களுக்கு எந்த மனிதரோடும் (செய்கையால் தவிர) பேச மாட்டீர் என்பதே அடையாளமாகும் என்றான் இறைவன். (அல் குர்ஆன் 19: 2 - 10)

மரியாளுக்கு ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்குறிய பாடமாக ஜகரிய்யா வாழ்வின் சம்பவங்கள் நிகழ்கின்றன.

முதுமையின் எல்லையை அவரும் - பிள்ளைப் பேறு அற்ற மலட்டு நிலையில் மாதவிடாயின் நம்பிக்கையெல்லாம் இழந்து விட்டு நிற்கும் நிலையில் அவர் மனைவியும் வாழும் நிலையை மரியாள் மிக நன்றாக அறிந்துள்ள நிலையில் ஜகரிய்யாவிற்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
இது எப்படி சாத்தியம்?

குழந்தைப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் ஆண் பெண் (கணவன் - மனைவி) மட்டும் இருந்தால் போதாது. ஆணிடம் வீரியமான இரத்த ஓட்டமும் - வாலிபத்தன்மையும், பெண்ணிடம் மாதவிலக்குக்குட்பட்ட வயதும் இருக்க வேண்டும்.

ஆணுக்கு எலும்புகளெல்லாம் தளர்ந்துப் போன நிலையில் - பெண்ணுக்கு மாதவிடாய் அற்றுப் போன நிலையில் குழந்தைப் பேறு என்பது சாத்தியமா... என்ற இயற்கையான சிந்தனையோட்டம் மரியாளுக்கும் இருந்திருக்கத்தான் செய்யும்.

ஏனெனில் இதே வாதத்தை ஜகரிய்யா அவர்களும் முன் வைக்கிறார்கள். தன் நிலையை தெளிவாக உணர்ந்த ஜகரிய்யா அவர்கள் 'இது எப்படி சாத்தியமாகும்' என்கிறார்கள். உன் நிலையிலிருந்து பார்த்தால் இது சாத்தியமற்றதாக தோன்றும் ஆனால் எனக்கு இது மிக எளிதானது' என்று இறைவன் பதில் கூறி விடுகிறான்.

இயற்கையை கடந்த ஒரு அற்புதம் தான் வளரும் வீட்டில் நிகழ்வதை மரியாள் பார்க்கிறார். முதுமையின் எல்லைக்கு சென்ற நிலையில் அவர்கள் குழந்தைப் பெற்று எடுக்கிறார்கள். இதில் நிறைய பாடங்கள் மரியாளுக்கு அடங்கி இருந்தன.

இறைவனுக்கும் - ஜகரிய்யாவிற்கும் நடந்த உரையாடல் தன் இயலாமையை அவர் வெளிபடுத்திய விதம். தன்னால் முடியாது எதுவுமில்லை என்ற இறைவாக்கின் உண்மை. சொல்லி வைத்தது போன்று 'யஹ்யா' என்ற பெயர் கொண்ட குழந்தையின் பிறப்பு. அந்த தருணங்களில் மூன்று நாட்கள் ஜகரிய்யாவால் வாய் பேச முடியாமல் போய்விட்ட அடையாளம் இப்படியாக நிறைய பாடங்களை மரியாள் பெறுகிறார்.

இது ஒருநாள் - இரண்டு நாளில் முடியும் சம்பவமல்ல. வருடத்தை தொடும் அளவிற்கு இதே சூழல் அந்த வீட்டில் - மரியாள் வளரும் ஜகரிய்யாவின் வீட்டில் - நிலைப்பெறுகிறது. இயல்புக்கு மாற்றமான ஒரு சம்பவம் நடக்கும் இடத்தில் மாத கணக்கில் வாழும் ஒருவருக்கு உளவியல் ரீதியாக தாக்கங்கள் - மாற்றங்கள் ஏற்படவே செய்யும். இந்த உளவியல் ரீதியான மாற்றம் மரியாளுக்கு மிக தேவையாக இருந்தது. அவருக்கு நிகழப்பபோகும் ஒரு காரியத்தில் அவர் நிலை கொள்ள - உளவியல் ரீதியாக அதை எதிர்கொள்ள இந்த பாடமும் காலகட்டமும் அவசியம் தான் என்பதை சிந்திக்கும் எந்த மனமும் ஒப்புக் கொள்ளும்.

குழந்தை உருவாக வேண்டுமானால் கணவனும் - மனைவியும் வாலிபத்தோடு இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை. ஆனாலும் இறைவன் நாடினால் எந்த இயற்iயையும் கடந்து அவன் நாடுவது நடக்கும் என்ற மன பக்குவத்தைப் பெற்ற நிலையில் தான் இயேசு பற்றிய நன்மாராயத்தை மரியாள் பெறுகிறார்.

மரியம் (மரியாள்) என்பது திருக்குர்ஆனின் 19வது அத்தியாயப் பெயர்.

மரியாள் பற்றிய இயேசு பற்றிய வரலாறுகள் - இயேசுவிற்கு பின்னால் ஏற்பட்ட சர்ச்சைகள் எல்லாம் இந்த அத்தியாயத்திலும் குர்ஆனில் இன்னும் பல்வேறு இடங்களிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

நர் மேலே எடுத்துக் காட்டிய ஜகரிய்யா அவர்களின் பிரார்த்தனை இந்த மரியம் என்ற அத்தியாயத்தில் தான் கூறப்பட்டுள்ளது. அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறப்பதை தொடர்ந்து மரியாளின் வரலாறு விவரிக்கப்படுகிறது.

(முஹம்மதாகிய இறைத்தூதரே!) இந்த வேதத்தில் கூறப்படும் மரியமைப் பற்றியும் அவர்களுக்கு நினைவூட்டுவீராக. தமது குடும்பத்தை விட்டும் கிழக்கு திசையில் உள்ள ஒரு இடத்தில் அவர் தனித்து ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அப்போது அவரிடத்தில் நமது ரூஹை - ஆன்மாவை அனுப்பினோம் - அவர் முழுமையான மனிதராக மரியாளுக்கு தோற்றமளித்தார். (அல் குர்ஆன் 19: 16 - 17)

(அவரைக் கண்டதும் மரியாள்) நீர் இறைவனுக்கு அஞ்சக் கூடியவராக இருந்தால் உம்மைவிட்டும் அந்த (இறைவனாகிய) அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்றுக் கூறினார் (அல் குர்ஆன் 19:18)

(பயப்படவேண்டாம்) நான் உம் இறைவனால் அனுப்பப்பட்ட (வானுலக) தூதன். உமக்கு பரிசுத்தமான ஒரு புதல்வன் பற்றிய அன்பளிப்பு (செய்தியை) தருவதற்காக வந்துள்ளேன் என்றார் (அல் குர்ஆன் 19:19)

எந்த ஆணும் என்னை தீண்டாமலும், நான் நடத்தைக் கெட்டவளாக இல்லாமலும் இருக்கும் நிலையில் எனக்கு எப்படி குழந்தை உருவாக முடியும்? என்று மரியாள் கேட்கிறார். (அல் குர்ஆன் 19:20)

அது அப்படித்தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்று மிக்கவராகவும் நம் அருளாகவும் ஆக்குவோம். இது கட்டாயம் நிறைவேறும் கடமையாகும் என்று இறைவன் கூறுவதாக அவர் கூறினார் (அல் குர்ஆன் 19:21)

பின்னர் (மரியாள்) இயேசுவை கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார் (அல் குர்ஆன் 19:22)

இதே கருத்து கூடுதல் விபரங்களுடன் மூன்றாவது அத்தியாயத்திலும் கூறப்பட்டுள்ளது.

மர்யமே! இறைவன் தன் வார்த்தையைப் பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மரியமின் மகனான ஈஸா மஸீஹ் என்பது அவரது பெயர். அவர் இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் (இறைவனுக்கு) நெருக்கமானவராக இருப்பார். அவர் தொட்டில் குழந்தையிலும், இளமையிலும் மக்களிடம் பேசுவார். நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:45 - 46)

இறைவா! எந்த ஆணும் என்னை தொடாத நிலையில் எனக்கு எப்படி கர்ப்பம் ஏற்படும் என்று அவர் (மரியாள்) கேட்டார் 'தான் நாடியவற்றை இறைவன் இவ்வாறே படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவு செய்து விட்டால் 'ஆகுக' என்பான் உடனே அது ஆகிவிடும்' என்று இறைவன் கூறினான் (அல் குர்ஆன் 3:47)

மரியாளை வானவர்கள் நேரடியாக சந்தித்து இயேசு பற்றி சுப செய்தி சொன்ன விபரங்கள், மரியாளுக்கு ஏற்பட்ட சந்தேகம், அதற்கு இறைவன் கொடுத்த பதில் என்று எல்லா விபரங்களும் இந்த வசனங்களில் கிடைக்கின்றன. (இந்த வசனங்களில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை அதை பின்னர் விளங்கலாம்)

இனி இதுபற்றி பைபிள் என்ன கூறுகிறது என்பதை பார்த்து விட்டு வருவோம் இன்ஷா அல்லாஹ்

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..! வரலாறு - 2

இயேசுவின் வாழ்க்கையை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுகத்திற்கு வந்தாரோ அந்த சமுகம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த சமுகம் யார் என்பதையும் முதல் தொடரில் ஓரளவு கண்டோம்.

இயல்பாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு பலர் கொலையும் செய்யப்பட்டதால் கடின சித்தம் படைத்த யூதர்களை நல்வழி படுத்த இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற இறைவனின் ஏற்பாட்டாலும், தன் வயிற்றிலும் சந்ததியிலும் சிறந்த குழந்தை உருவாக வேண்டும் என்ற இயேசுவின் தாய் வழி பாட்டியார் செய்த பிரார்த்தனையாலும் இயேசுவை இறைவன் தேர்ந்தெடுக்கிறான்.

(இயேசுவாகிய) அவர் (நம்முடைய) அடியாரேயன்றி வேறில்லை. அவர்மீது நாம் அருள் புரிந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை ஓர் உதாரணமாக்கினோம் (அல் குர்ஆன் 43:59) என்ற வசனம் பிரத்யேகமாக யூதர்களுக்கு இறைவன் வழங்கிய அத்தாட்சியை - நமது இரண்டாவது கூற்றை - மெய்ப்பிக்கிறது.

இனி வரலாற்றுக்குப் போவோம்.

நிச்சயமாக இறைவன் ஆதாமையும், நோவாவையும், ஆப்ரஹாமின் சந்ததியினரையும், இம்ரானுடைய குடும்பத்தினரையும் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்துள்ளான். (அல் குர்ஆன் 3:33)அவர்களில் அனைவரும் முந்தியவர்களின் சந்ததியினர்தான். (அல் குர்ஆன் 3:34) 3:33 வது வசனத்தில் ஆதாம், நோவா, இப்ராஹிமுடைய சந்ததி என்றெல்லாம் இறைவன் குறிப்பிடுவதை நாம் அறிவோம். அதன் தொடர்ச்சியாக 'இம்ரானின் குடும்பத்தினர்' என்று இறைவன் கூறுகிறான். இந்த இம்ரான் குடும்பத்தில் ஒருவராகத்தான் இயேசு அவர்கள் பிறக்கிறார்கள். இயேசுவின் தாய் வழி பாட்டி - மரியாளின் தாய் - செய்த பிரார்த்தனை இயேசுவின் வருகைக்கு ஒரு முன்னுரையாக அமைந்தது.

மரியாளின் தாயார் கர்ப்பம் தரித்திருந்த போது ''இறைவா என் வயிற்றில் உள்ள குழந்தையை உனக்காக நேர்ந்து விட்டேன். அது முழுமையாக உனக்காக அர்ப்பணிக்கப்படும். இதை என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக. நீயே செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறாய்'' என்று இம்ரானின் மனைவி பிரார்த்தித்தார். (அல் குர்ஆன் 3:35)

அவர் குழந்தையை ஈன்றெடுத்த போது 'இறைவா.. நான் பெண்குழந்தையைப் பெற்று விட்டேனே..' என்றார். அவர் எத்தகையதை ஈன்றெடுத்தார் என்பதை இறைவன் நன்கறிவான். 'ஆண் பெண்ணைப் போன்றவனல்ல. நான் இவளுக்கு மரியம் (மரியாள்) என்று பெயரிட்டுள்ளேன். சபித்து துரத்தப்பட்ட (தீய சக்தியான) ஷைத்தானை விட்டு இவளுக்கும் இவளின் வழிதோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்' என்று அவர் (மரியாளின் தாயார்) கூறினார் (அல் குர்ஆன் 3:36)

இஸ்ரவேலர்களில் விதிவிலக்காக இறைவனை நம்பி - அவனுக்கு எதையும் இணையாக்காமல் கட்டுபட்டு நடக்கும் ஒரு நல்ல பெண்ணாக மரியாளின் தாயார் வாழ்ந்துள்ளார் என்பதை இந்த வசனங்களின் மூலம் விளங்கலாம். இவர் வாழ்ந்த காலகட்டத்தில் அந்த சமூகத்தின் மனப்பான்மை எப்படி இருந்ததது என்பதை 2:87 வசனத்தின் மூலம் முதல் தொடரில் அறிந்தோம்.

இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு சிலர் கொலை செய்யப்பட்ட மட்டமான - மோசமான சூழ்நிலை நிலவி வருவதை மரியாளின் தாயார் கண்டு அனுபவிக்கிறார்கள். இந்த கொடுமையை எதிர்க்க தன் புறத்திலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்கள் இப்படி ஒரு பிரார்த்தனையை செய்ய தூண்டி இருக்கலாம். இங்கு தொடரும் அவலங்கள் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வராது என்பதை உணர்ந்தும், தான் ஒரு பெண் என்பதால் தன்னால் களத்தில் நின்று இந்த கொடுமையாளர்களை எதிர்க்க முடியாது என்பதாலும் தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்து வளர்ந்து இறை வழியில் தன்னை அர்ப்பணித்து இவர்களுக்கு பாடம் புகட்டட்டும் என்ற சிந்தனையாளும் அவர்கள் இந்த பிரார்த்தனையை வைத்திருக்கலாம்.

'என் வயிற்றில் உள்ளதை உனக்காக அர்ப்பணிக்கிறேன்' என்ற கூற்றை சிந்திக்கும் போது நாம் எழுதியவாறு உள்ள எண்ண ஓட்டங்கள் அந்த தாயின் மனதில் எழுந்திருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. அவர் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறார் அது பெண் குழந்தையாகி விடுகிறது. அவர் எதிர்பார்த்த ஆண் குழந்தை கிடைக்கவில்லை. தன் எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலையில் தான் 'நான் ஒரு பெண் குழந்தையை பெற்று விட்டேனே..' என்கிறார். ஆண் பெண்ணைப் போன்றவனல்ல.. என்ற அந்த தாயின் கூற்றும் 'இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்து போராட்ட களம் காணும் தகுதி ஆணுக்கு தான் இருக்க முடியும் ஆனால் பிறந்தது பெண்ணாகி விட்டதே..' என்ற கவலையின் சாயலில் தான் வெளிப்படுகிறது. இருந்தும் அவர் தன் நம்பிக்கையை தளர்த்திக் கொள்ளாமல் குழந்தைக்கு மரியம் (மரியாள்) என்று பெயரிட்டு அதை இறைவனின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறார்கள்.

அவரை (மரியாளை) இறைவன் அழகிய முறையில் எடுத்துக் கொண்டான். அவரை அழகிய முறையில் வளர்த்தான். அவருக்கு ஜகரிய்யாவை பொறுப்பாளியாக்கினான். (அல் குர்ஆன் 3:37)

(உள்ளத் தூய்மையோடும் உயர்ந்த நோக்கத்திற்காகவும் இறைவனிடம் செய்யும் முறையீடுகள் (பிரார்த்தனைகள்) எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முஸ்லிம்களுக்கு இதில் படிப்பனையுள்ளது.) பைபிளின் புதிய ஏற்பாட்டின் நான்கு சுவிசேஷ காரர்களான மாற்கு, மத்தேயு, லூக்கா, யோவான் இவர்களில் யாரும் குர்ஆனில் வரும் மரியாளின் தாயார் பற்றிய சம்பவங்களை குறிப்பிடவே இல்லை.

ஜகரிய்யா பொறுப்புதாரியாக்கப்பட்டார் என்பதிலிருந்து மரியாளின் தாயார் மரியாளை பெற்றவுடன் மரணித்து இருக்கக் கூடும் என்பதை யூகிக்கலாம். ஜகரிய்யா அவர்களிடம் வளரும் மரியாளுக்கு அவ்வப்போது சிற்சில அற்புதங்கள் நிகழ்கின்றன.

மரியாள் தங்கிக் கொள்ளும் அறைக்கு ஜகரிய்யா அவர்கள் செல்லும் போதெல்லாம் மரியாளிடம் இருக்கும் உணவு வகைகளை கண்டு 'மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்கிறார்கள். அதற்கு மரியாள் இது இறைவன் கொடுக்கிறான். அவன் தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான் என்கிறார்கள். (அல் குர்ஆன் 3:38)

இறைவனிடமிருந்து மரியாள் பெற்ற அறிவிப்பு.

மரியமே! இறைவன் உம்மை தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்தின் பெண்களை விட உன்னை சிறப்பித்துள்ளான் என்று வானவர்கள் நற்செய்திக் கூறுகிறார்கள். (அல் குர்ஆன் 3:42)

மரியமே! உனது இறைவனுக்கு பணிந்து நடப்பாயாக, அவனுக்காக தலை தாழ்த்தி வணங்குவாயாக. குனிந்து வணங்குவோருடன் குனிந்தும் வணங்குவாயாக என்றும் வானவர்கள் கூறினார்கள். (அல் குர்ஆன் 3:43)

இவை மறைவனா செய்திகளாகும். (முஹம்மதே.. இறைவனாகிய) நாமே இதை உமக்கு அறிவிக்கிறோம். மர்யமை யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று முடிவு செய்ய அவர்கள் எழுதுகோல்களைப் போட்ட போதும், இது குறித்து அவர்கள் சர்ச்சை செய்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (அல் குர்ஆன் 3:44)

மரியாளை இறைவன் அகிலத்தின் பெண்களை விட தூய்மைப்படுத்தியதாகவும், அவரை இறைவன் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவும் இந்த வசனங்களில் கூறப்படுகின்றன. கிறிஸ்துவ பிரச்சாரர்களால் இந்த வசனங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். தேர்ந்தெடுத்து தூய்மைப்டுத்துதல் என்பதை 'தூய்மைப்படுத்தி மனைவியாக தேர்ந்தெடுத்துக் கொண்டான்' என்று வளித்து பொருள் கொண்டு - இறையச்சமின்றியும் பகுத்தறிவு சிந்தனையின்றியும் - விஷமத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் என்பவன் தனித்தவன், பெறப்படாதவன், யாரையும் பெற்று தாயாகவோ தந்தையாகவோ ஆகாதவன், எத்தகைய தேவையும் அற்றவன், அவனுக்கு நிகராக எதுவுமில்லாதவன் என்றெல்லாம் இஸ்லாம் இறைவனுக்கு இருக்க வேண்டிய தனித்தகுதிகளை - இறைவனைத் தவிர பிறருக்கு இருக்கவே முடியாத தகுதிகளை - உலகில் முழங்கி அந்த சத்தியத்தின் பக்கம் மக்களை ஈர்த்து வளர்ந்துக் கொண்டு வருவதை அறியாதவர்களல்ல இவர்கள். இருப்பினும் இவர்களின் 'திரித்துவ' கொள்கையை மக்களிடம் - குறிப்பாக முஸ்லிம்களிடம் - திணிக்க திரித்தல் கலையை கையாண்டு வருகிறார்கள்.

தூய்மைப்படுத்துதல் - தேர்ந்தெடுத்தல் என்பதன் பொருள் என்ன?மனைவியாக வருபவளை மட்டும் தான் தூய்மைபடுத்த முடியும். தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான் கிறிஸ்துவ உலகின் அளவுகோலா...கிறிஸ்துவத்தை பிரச்சாரம் செய்வதற்காகவே உருவாக்கப்படும் கன்னியாஸ்திரிகள் எப்படிப்பட்டவர்கள்? மத குருக்களால் தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்தப்படுபவர்களே கன்னியாஸ்திரிகள் என்ற தகுதியை அடைய முடியும். இப்படி தெர்ந்தெடுக்கப்பட்டவர்களெல்லாம் கர்த்தருக்கு மனைவியாகத்தான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள் என்று கூறி கிறிஸ்துவ உலகம் கர்த்ததை காமம் நிறைந்தவராகவும் பெண் மோகம் உள்ளவராகவும் சித்தரிக்குமா... அப்படியெல்லாம் இல்லையென்றால், மரியாளுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா... இன்றைய கன்னியாஸ்திரிகள் கர்த்தர் வழியில் தன்னை அர்ப்பணித்து அவருக்கு ஊழியம் செய்யவே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தப் பணிக்கு உள்ளத்தூய்மையும் கட்டுப்பாடும் முக்கியம் என்பதால் அதற்கான பயிற்சியின் மூலம் அவர்கள் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள் என்று கிறிஸ்துவம் பதில் சொன்னால் இந்த வாதம் மரியாளின் விஷயத்தில் மட்டும் பொருந்தாமல் போய்விடுமா...

உலக அளவில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் கல்விக் கூடங்கள் இன்னபிற நிறுவனங்கள் இங்கெல்லாம் ஏனோ தானோவென்று ஆட்களை நியமிக்கிறார்களா... அல்லது தகுதிப்படைத்தவர்களை தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்களா... இங்கெல்லாம் நல்ல ஆண்களை தெர்ந்தெடுக்கும் போது அது அங்குள்ள பெண்களுக்கு கணவர்கள் என்ற அடிப்படையில்தான் என்றும், சிறந்தப் பெண்களை தேர்ந்தெடுக்கும் போது இது அங்குள்ள ஆண்களுக்கான மனைவிகளின் தேர்வுதான் என்றும் பிறர் விளக்கம் சொன்னால் இவர்களால் பொருத்துக் கொள்ள முடியுமா...

தேர்ந்தெடுத்தலும் - தூய்மைப்படுத்துதலும் மனைவியாக்கத்தான் என்பது எவ்வளவு கீழ்தரமான வாதம் என்பதை கிறிஸ்துவ சகோதரர்கள் இப்போது உணர்வார்கள் என்று நம்புகிறோம். கர்த்தர் மரியாளை தேர்ந்தெடுத்து தூய்மைப்படுத்துகிறார் என்பது உண்மைதான். இறைவனுக்கு மனைவி என்ற மட்டரகமான தகுதிக்காக இந்த தேர்வு நடக்கவில்லை. இந்த தேர்வு மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனைக்காக நடந்ததாகும். யூதர்களின் கொடுமையை கண்டு அதை எதிர்க்க தன் பங்களிப்பாக தன் வயிற்றில் வளர்வதை இறைவனுக்கு அர்ப்பணிக்க முடி செய்து அதை கர்த்தரிடம் அறிவிக்கவும் செய்கிறார். ஆனால் கர்த்தர் கொடுத்ததோ பெண் குழந்தை. 'நான் ஒரு பெண்ணை பெற்றுவிட்டேனே...' என்று அவர் மனம் நொந்துப்போனாலும் கர்த்தரின் திட்டம் வேறு விதமாக இருந்தது. ஆண் பெண்ணைப் போன்றவனல்ல என்று அந்த தாய் நினைத்தாலும் பெண்ணாலும் இறைவழியில் பெரும் தியாகம் செய்ய முடியும் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக மரியாளை தேர்ந்தெடுப்பது இறைவனின் திட்டமாக இருந்தது. கர்த்தருக்கான அர்ப்பணத்திற்கு ஒரு முன்னுதாரனமாகத்தான் அந்த பெண் தேர்ந்தெடுக்கப்படுகிறாரே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. மரியாளின் தாயார் செய்த பிரார்த்தனைக்கு களம் அமைக்கும் விதமாகவே அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தாயாரின் மறைவுக்கு பிறகு அவரை வளர்ப்பது யார் என்ற பிரச்சனையும் அவர் குறித்த சர்ச்சையும் கிளம்பியதாக இறைவன் 3:44 வசனத்தில் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர் தனித்துவம் வாய்ந்த பெண்ணாக வளர்ந்துள்ளார் என்பதை விளங்கலாம்.

பிற்காலத்தில் இறைவனால் ஏற்படப்போகும் ஒரு மகத்தான சோதனைக்கு அவரை மனோவியல் ரீதியில் தயார் படுத்துவதற்காக அவரை வளர்க்கும் பொறுப்பை இறைவன் இறைத்தூதர் ஜகரிய்யா அவர்களிடம் ஒப்படைக்கிறான். மரியாளை பொறுப்பேற்று வளர்க்கும் போது ஜகரிய்யா அவர்களுக்கு குழந்தை இல்லை. வயதானாலும் குழந்தைக்காக ஏங்கும் இதயம் மட்டும் அவர்களுக்கு ஓயவில்லை. மரியளை குழந்தைக்கு குழந்தையாக வளர்த்து வணக்க வழிபாட்டின் மூலம் அவர்களை பக்குவப்படுத்திக் கொண்டிக்கும் வேளையில் தான் மரியாளுக்கு இறைவன் புறத்திலிருந்து உணவுகள் வழங்கப்படுவதை ஜகரிய்யா அவர்கள் பார்க்கிறார்கள். இது எப்படி உனக்கு கிடைத்தது? என்ற கேள்விக்கு கணக்கின்றி கொடுக்கும் ஆற்றல் உள்ள இறைவன் தான் இதை எனக்கு கொடுக்கிறான் என்று மரியாளிடமிருந்து பதில் வருகிறது. எதற்கும் ஆற்றல் உள்ள இறைவன் தனக்கு ஏன் ஒரு வாரிசை - மகனை கொடுக்க மாட்டான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், 'இறைவா உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையை கொடுத்தருள்' என்று பிரார்த்திக்கிறார்கள். இறைவன் அதை ஒப்புக் கொள்கிறான். இறைவன் ஒப்புக் கொண்டாலும் ஜகரிய்யா அவர்களால் இதை நம்ப முடியவில்லை ஏனெனில் அவர் தள்ளாத முதுமையை அடைந்து விட்டார்கள். அவர்களின் மனைவியும் குழந்தைப்பேறைப் பெரும் மாதவிடாய் தகுதிகளையெல்லாம் இழந்து மலடு தட்டி விடுகிறார்கள். குழந்தை உருவாவதற்கான இயற்கை விதிகள் கடந்து போயிருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கின்றது. யஹ்யா என்ற மகனை 'இறைத்தூதரை' ப் பெற்று எடுக்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் 3:38 - 39 - 40 வசனங்களிலும் மரியாள்(மரியம்) என்ற 19வது அத்தியாயத்தின் ஆரம்ப ஆறு வசனங்களிலும் கிடைக்கின்றன.

மரியாளை மனோரீதியாக உருவாக்க வேண்டிய நிலையில் ஜகரிய்யா அவர்களின் வழியாக இறைவன் அந்த பாடத்தை போதிக்கிறான்.

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..! வரலாறு - 1

அறிமுகம்.
உலக அளவில் 200 கோடி மக்களால் - அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள படி இரச்சகராகவும், 170 கோடி முஸ்லிம்களால் அவர்களின் வேத அறிவிப்புப் படி இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த மனிதர் இயேசு என்று அழைக்கப்படக் கூடிய ஈஸா(அலை) அவர்கள்.

இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சர்ச்சை இரு சமூக, சமூக தலைவர்களுக்கு மத குருக்களுக்கு மத்தியில் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கிறது. இதில் இயேசுவை இரச்சகர் - கடவுளின் மகன் என்று கூறி வழிப்படுவோர் வெறும் கற்பனையால் புனையப்பட்ட யூகத்தின் அடிப்படையில்தான் தம்முடைய நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள் என்று அந்த சமூகம் சார்ந்த சில வரலாற்று ஆய்வாளர்கள் துணிந்து தெரிவித்து வருகிறார்கள்.

பரிசுத் வேதாகாமம் என்று கிறிஸ்துவர்களால் போற்றப்படும் பைபிளில் இயேசுவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக வந்துள்ள கருத்துக்களையும் சம்பவங்களையும் அந்த வரலாற்றாளர்கள் தங்களுடைய கருத்துக்கு சாதகமாக ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். உரிய இடத்தில் இறை நாட்டப்படி அதை நாம் விளக்குவோம்.

இயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களிடம் அவரை இறைத்தூதர் என்று அறிவிக்கும் குர்ஆன் உள்ளது. இதில் இயேசுவின் பிறப்பு அதிசயம், குழந்தை பருவம், மழலை பருவத்தில் அவர் தம் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திர வாதம், வாலிபம், பிரச்சாரம், அவரது சீடர்கள், எதிரிகளின் சூழ்ச்சி, இறுதி முடிவு என்று அவர் பற்றிய எல்லா விபரங்களும் கூறப்பட்டுள்ளன. அவரை கடவுளின் குமாரர் என்று - இரச்சகர் என்றோ குர்ஆன் ஏற்கவில்லை. அவ்வாறு கூறுவோரின் கூற்றை குர்ஆன் கடுமையாக மறுத்துள்ளது.

சமூகமும் - இயேசுவின் பிறப்பும்

இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும். இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள். இதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது. (முக்கிய குறிப்பு) கிறிஸ்துவ மத குருமார்கள்; இயேசுவிற்குபிறகு எந்த நபியும் இல்லை என வாதிக்கிறார்கள். இதற்கு காரணம் ஆப்ரஹாமின் முதல் மகன் இஸ்மவேலின் வரலாற்றை அவர்கள் கண்டுக் கொள்ளாததேயாகும். இரண்டாவது மகனான ஈசாக்குவின் பக்கமே அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் இஸ்மவேலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை உரிய இடத்தில் பார்ப்போம் (இன்ஷா அல்லாஹ்)

ஆப்ரஹாம் (இப்ராஹீம்) அவர்களின் முதல் மனைவியான சாராள் என்ற சபுராவிற்கு ஈசாக்கு என்ற இஸ்ஹாக் அவர்கள் இரண்டாவது குழந்தையாக பிறக்கிறார்கள். இவர்களின் சந்ததி பல கிளைகளாக பிரிந்து பெருகி பல இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒவ்வொரு சந்ததியினருக்கும் நேர்வழிக் காட்ட இறைவன் புறத்திலிருந்து தீர்கதரிசிகள் - இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள். ஈசாக்(இஸ்ஹாக்)குடைய மகனாக யாகோப்(யஃகூப்) என்ற தீர்கதரிசி பிறக்கிறார்கள். இவர்களே 'இஸ்ராயீல்' என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள் தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள். அப்ரஹாம்(இப்ராஹீம்) அவர்கள் தம் மக்களுக்கு செய்த உபதேசத்தையே அவர்களின் மகன் ஈசாக்(இஸ்ஹாக்) அவர்களும், அவர்களுக்கு பின் மகன் வழி பேரன் யாகோப்(யஃகூப்) அவர்களும் செய்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் குர்ஆனில் வருகிறது.

'(ஆப்ரஹாம் ஆகிய) அவருக்கு அவருடைய இறைவன் ''எனக்கு நீர் கீழ்படியும்'' என்று கூறியதும் ''அகிலத்தாரின் இரச்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்'' என்று கூறினார் (அல் குர்ஆன் 2:131) இதையே தம் மக்களுக்கு அவர்கள் நல்லுரையாகவும் கூறினார்கள்.(இஸ்ரவேலாகிய) யஃகூபும் '' என் மக்களே! நிச்சயமாக இறைவன் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்கு தேர்ந்தெடுத்துள்ளான். எனவே நீங்கள் (அந்த ஏக இறைவனுக்கு) முற்றிலும் கீழ் படிந்தவர்களாக அன்றி மரணித்து விட வேண்டாம்'' என்கிறார்கள். (அல் குர்ஆன் 2:132)

யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ''எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?''மக்கள் பதில் சொல்கிறார்கள் ''நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குரியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குரியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே அறைவனையே வணங்குவோம்'' (அல் குர்ஆன் 2:133)

இப்படி பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள். இத்தயை மக்களிடம் தான் இயேசு(ஈஸா) அவர்கள் பிரசாரம் செய்வதற்காக வருகிறார்கள் கடைசியாக. இயேசுவிற்கு முன்னால் மோஸே (மூஸா) அவர்கள் அதே மக்களை வந்து சந்திக்கிறார்கள். ''நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தை கொடுத்தோம். அவருக்கு பின்னால் தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். மரியாளின் (மர்யமின்) குமாரர் இயேசு(ஈஸா)விற்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கியும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவரை பலப்படுத்தியும் வைத்தோம். (யூதர்களே) உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும் நீங்கள் பெருமையடிக்கிறீர்கள். ஒரு சாராரை பொய்படுத்தினீர்கள் ஒரு சாராரை கொலையும் செய்தீர்கள்.'' (அல் குர்ஆன் 2:87)

மோஸே அவர்களுக்க பிறகு இறைவன் தொடர்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்கதரிசிகள் யூதர்களால் ''பொய்பிக்கப்பட்டார்கள்'' அல்லது ''கொலை செய்யப்பட்டார்கள்'' என்ற விபரம் மேற்கண்ட வசனத்தில் கிடைக்கின்றன. பொய்பிப்பதற்கும் கொலை செய்யப்பட்டதற்கும் என்ன காரணம்? அதே வசனத்தில் விடையும் கிடைத்து விடுகிறது. 'உங்கள் மனம் விரும்பாததை எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும்..' என்ற இறைவனின் வார்த்தைகள், யூதர்கள் அவர்களின் மன விருப்பத்திற்கு மாற்றமாக - அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய எந்த செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ஆனால் தாம் விரும்பாத ஒரு கொள்கையை - செய்தியை சொல்பவர்களை கொலை செய்யும் மனப்பக்குவம் பெற்றவர்களை கண்டிருக்கிறோமா... யூதர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டார்கள். இதையும் அந்த வசனத்திலிருந்தே அறியலாம்.

இந்த சூழலில் தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான். அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் - வரும் தலைமுறைக்கு - நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது இறைவன் தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான். இறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி - அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் - நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும், 'இயல்பாக' சராசரியாக வந்த தூதர்கள் அனைவரும் பொய்பிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் 'பிறப்பிலேயே அற்புதம் மிக்க ஒரு இறைத்தூதரை யூதர்களுக்காக அனுப்புவோம்' என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது.

Sunday, March 27, 2011

குர்ஆனில் பெண்கள்

ஆண்கள் உலகில் பெண்கள் காலாகாலமாக பல கோணங்களில் பார்க்கப்படுகிறார்கள். விவாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களை மிக உயர்ந்த உன்னதப் படைப்பாக பார்த்து கவுரவிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை மிக மட்டரகமாக பார்த்து இழிவுபடுத்தும் ஆண்கள் மறுபுறம்.

பெண்களை தாய்மையுடன் பார்த்து மதிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை வெறும் பாலியல் இயந்திரமாக பார்த்து பழகிப் போன ஆண்கள் மறுபுறம்.

மனிதப் பிறவியில் பெண் தனித்தன்மை வாய்ந்தவள் என்று உணர்ந்து மதிப்பவர்கள் ஒரு புறம் என்றால், அவளுக்கு ஆத்மா என்று ஒன்று உண்டா என்று காராசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பவர்கள் மறுபுறம்.

இப்படியாக ஆண்களின் பார்வையிலும் சிந்தனையிலும் பெண் பல நிலைகளில் பரிணமிக்கிறாள்.

பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த வரலாறு மிக நீண்டதாகும். 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளிலிருந்து பெண்கள் உரிமைப் பற்றிய பேச்சுகள் அடிப்பட்டு இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது எல்லைக் கடந்துப் போய் கொண்டிருக்கின்றது.

பெண்களின் வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் அறிவாதாரத் தேவைகள் ஆகியவைத்தான் அவர்களுக்கான சரியான உரிமைகள் என்று ஆண்களில் ஒரு சாராரின் சிந்தனை வளர்ந்து அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது, உலக அழகிப் போட்டியும் உடைக்குறைப்பும் ஊர் சுற்றலுமே பெண்களுக்குத் தேவையான உரிமைகள் என்று அதற்காக பணத்தை அள்ளிக் கொட்டி பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆண்கள் கூட்டம் மறுபுறம்.
உண்மையில் பெண்களின் உரிமைகளை எப்படித் தீர்மானிப்பது என்பதில் பெண்களுக்கு மத்தியிலும் ஆண்களுக்கு மத்தியிலு்ம் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது என்றால் அதுதான் உண்மை.

பல்வேறு சாசன புத்தகங்கள், சட்ட புத்தகங்கள், அறிஞர் அவைகள் என்று அலசப்படும் இந்த விவாதத்தில் இதோ நாங்கள் குர்ஆனை முன் வைக்கிறோம். திருக்குர்ஆன் பெண்கள் பற்றி வரையறுத்துக் கொடுத்துள்ள அந்த சட்டங்களில் எது பெண்களுக்குக் கிடைக்க வேண்டுமோ அவ அனைத்தையும் நீங்கள் காணலாம்.திருக்குர்ஆன் வரையறுத்துக் கொடுத்துள்ள இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் பெண்ணுரிமை என்ற விவாதமே தேவையற்ற ஒன்றாகி விடும்.

இஸ்லாம் பார்க்கும் பெண் இதோ தொடருங்கள்.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (திருக்குர்ஆன் 2:228)

அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. (திருக்குர்ஆன் 2:187)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

பொருள் திரட்டும் உரிமை

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. (திருக்குர்ஆன் 4:32)

கல்வி கற்றல், கற்பித்தல்

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். (திருக்குர்ஆன் 9:71)

சொத்துரிமை

குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. (திருக்குர்ஆன் 4:7)

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (திருக்குர்ஆன் 4:12)

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:11)

பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (திருக்குர்ஆன் 4:176)

மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)

திருமணக் கொடை (மஹர்) பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)

கணவனுள்ள பெண்களும் (மண முடிக்க விலக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:24)

இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை) மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (திருக்குர்ஆன் 5:5)

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தன் மகளுக்கு திருமண கொடைக் கேட்டுப் பெற்ற முஸ்லிம்.

எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர் என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 28:27)

மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு

அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)

மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா? (திருக்குர்ஆன் 4:20)

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (திருக்குர்ஆன் 4:21)

பெண்களுக்குக் கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது.

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)

தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

மறுமணம் செய்யும் உரிமை

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:6, 7)

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)

பிரியும் உரிமை

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:128)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)

ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.

உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (திருக்குர்ஆன் 3:195)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (திருக்குர்ஆன் 16:97)

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 40:40)

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 57:12)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 33:35)

பாதுகாப்பு

ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (திருக்குர்ஆன் 24:4)

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (திருக்குர்ஆன் 33:58)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 24:23)

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

நபியே! (முஹம்மதே!) பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர். (திருக்குர்ஆன் 65:1)

மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:129)

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:2)

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்) அவனே பொய்யன் என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும் அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (திருக்குர்ஆன் 24:6, 7, 8, 9)

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)

பண்பாடு

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 24:30)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அழகில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 24:31)

நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 33:59)

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு. (திருக்குர்ஆன் 24:26)

திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 24:60)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (திருக்குர்ஆன் 33:32)

உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறி விடுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும் பொய்யையும் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 58:2)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (திருக்குர்ஆன் 24:27)

இஸ்லாம் வழங்கியுள்ள இந்த சட்டங்களில் எவரேனும் குறை இருப்பதாகக் கருதினால் அவர்கள் தங்கள் வாதத்தை எழுதலாம்.

கிறிஸ்த்துவம் கேள்வி பதில்

இதுதான் இஸ்லாம் இணையத்திற்கு வந்த கேள்விகளும் அதற்கான பதில்களும்.

இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கிறிஸ்த்துவர்களிடம் விளக்குவதாக இருந்தால் எப்படி விளக்குவது?irvanm(at)reedifmaildotcom

சிறு சிறு வேறுபாடுகள் என்று ஏராளமாக இருந்தாலும் மிக முக்கிய வேறுபாடுகள் சில உள்ளன.

ஒன்று. இயேசு இறைத்தூதரா.. அல்லது இறை மகனா...

கிறிஸ்த்தவர்களில் ஒரு சாரார் இயேசுவை இறைமகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் இயேசுவை இறைத்தூதர் என்று நம்புகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்ட பைபிளும் குர்ஆனும் இயேசுவை இறைத்தூதர்தான் என்று திட்டவட்டமாக அறிவிக்கின்றது. அவர் இறை மகன் அல்ல என்று குர்ஆன் திட்டவட்டமாகவும் வன்மையாகவும் மறுத்துள்ளது. அதே போன்று பைபிளும் பல்வேறு இடங்களில் கர்த்தருக்கு சந்ததித்தேவையில்லை. மகன்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

''அல்லாஹ் (தேவன்) சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் (கர்த்தர்)மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா? (அல்குர்ஆன் 10:68)

இரண்டு. கிறிஸ்த்துவத்தின் சிலுவைப்பாடு.

சிலுவையில் அறையப்பட்டது இயேசுதான் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதை வைத்துதான் சிலுவை வணக்கங்கள் தோன்றின. ஆனால் குர்ஆன் சிலுவை சம்பவத்தை அடியோடு மறுக்கின்றது. இயேசு சிலுவையில் அறையப்படவே இல்லை. அவரை கர்த்தர் காப்பாற்றி தன்னலவில் உயர்த்திக் கொண்டார் என்பது குர்ஆன் முன் வைக்கும் முடிவு. பைபிளில் இடம் பெறும் சிலுவை சம்பவங்களை ஊன்றி படித்தால் கூட அதில் உள்ள முரண்பாடுகள் இயேசுவின் சிலுவை மரணத்தை கேள்விக்குறியாக்குகின்றன.

(இயேசுவாகிய) அவரை அவர்கள்(யூதர்கள்) கொல்லவில்லை. அவரைச் சிலுவையிலும் அவர்கள் அறையவில்லை. மாறாக அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது. இதில் முரண்பட்டோர் சந்தேகத்திலேயே உள்ளனர். ஊகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு இது குறித்து அறிவு இல்லை. அவர்கள் அவரை உறுதியாகக் கொல்லவே இல்லை.(அல்குர்ஆன் 4:157)

மூன்று. பைபிளின் நிலை.

பைபிளை வைத்தே கிறிஸ்த்தவம் தீர்மானிக்கப்படுகின்றது. பைபிள் பல்வேறு வரலாற்று குறிப்புகள், ஆங்காங்கே மனிதர்களின் சுய கற்பனைகள் போன்றவற்றின் தொகுப்பேயாகும். முஸ்லிம்கள் இந்த முடிவில் இருக்கும் போது ஆய்ந்தரிந்த பல கிறிஸ்த்தவர்களும் இந்தக் கருத்தை ஒப்புக் கொள்கிறார்கள். பைபிள் கர்த்தரால் இறக்கப்பட்ட புனித வேதமல்ல. இயேசுவுக்கு கர்த்தர் கொடுத்த வேதம் இன்றைக்கு இருக்கும் பைபிளல்ல. இயேசுவுக்குப் பின் அந்த வேதம் வேண்டிய அளவு மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன. அந்த மாற்றங்களின் தொடர் பல காலம் நீடித்தது.(பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு குறித்து ஒரு விரிவான கட்டுரை விரைவில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ். அப்போது அது இறைவேதத்திற்குரிய தகுதியில் உள்ளதா என்பதை கண்டுக்கொள்ள முடியும்).

நான்கு. இயேசு இறுதித் தூதரா..

இயேசுவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்ட ஒரு பிரிவினர் கிறிஸ்த்துவத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். பைபிளின் பல பகுதிகளை நம்பும் அவர்கள் இயேசுவை கடைசித் தூதர் என்று நம்பியுள்ளனர். அவர் கடைசித்தூதர் என்று அவர்கள் நம்பியுள்ள பைபிளின் எந்தப்பகுதியும் அறிவிக்காத நிலையில் இந்த முடிவுக்கு அவர்கள் வந்தததை அவர்கள் பரிசீலிக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு வந்து சத்தியப்பாதையைக் காட்டும் ஒரு தேற்றவாளர் (இறைத்தூதர்) குறித்த அறிவிப்பை பைபிளில் காணலாம்.

நான் பிதாவை வேண்டிக் கொள்வேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும் படிக்கு வெறொரு தேற்றவாளரை அவர் உங்களுக்கு தந்தருள்வார். உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கின்ற படியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது. (யோவான்14:15-16)

திருக்குர்ஆனும் - இயேசுவும்

ஒரு மதம் இன்னொரு மதத்தை கண்டுக் கொள்ளாமல் தனித்து போய் விட்டது போன்று இஸ்லாம் இல்லை. மோசே என்று கிறிஸ்தவர்களால் அழைக்கப்படும் மூஸாவின் வரலாற்றை திருக்குர்ஆன் விரிவாக எடுத்துச் சொல்வது போன்று இயேசுவைப் பற்றி குர்ஆன் விரிவாக பேசியுள்ளது. பைபிளில கிடைக்காத பல சம்பவங்கள் குர்ஆனில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேரி என்றும் மரியாள் என்றும் அழைக்கப்படும் இயெசுவின் தாயார் மரியம் பற்றிய வரலாற்று குறிப்புகள் அதிக இடங்களில் குர்ஆனில் விவாதிக்கப்பட்டுள்ளன. (இது குறித்து இயேசுவுக்கு நேர்ந்ததென்ன.. என்று வரலாற்று தொகுப்பில் எழுதி வருகிறோம்). பைபிளில் கைகழுவப்பட்ட இஸ்மவேல் என்ற ஆப்ரஹாமின் மகனுடைய வம்சத் தோன்றலில் ஏற்பட்ட உலகப்புரட்சியை கிறிஸ்த்தவ உலகம் திட்டமிட்டே மூடி மறைத்து வருகின்றன.

மிக முக்கியமான ஒரேக் கொள்கையை போதிக்க வந்த மோசே மற்றும் இயேசு போன்றவர்கள் அவர்கள் காலத்து மக்களால் துன்பத்துக்கு ஆளானார்கள் என்றால் அவர்களுக்குப் பின் அவர்கள் போதித்து சென்றக் கொள்கை மதகுருக்களால் துன்பத்துக்கு ஆளானது. இதையெல்லாம் குர்ஆன் விரிவாக விவாதிக்கின்றது

இதுதான் முக்கியமாக கிறிஸ்த்தவர்களின் கவனத்திற்கு செல்ல வேண்டியவைகளாகும். தேவன் உங்களை இரச்சிப்பார் என்ற போதனையை சொல்லியே கிறிஸ்த்தவ மத போதகர்கள் கிறிஸ்த்தவர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள பாடுபடுகிறார்கள். உண்மையில் தேவன் மனிதர்களை இரட்சிக்க வேண்டுமென்றால் கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தித்தால் மட்டும் போதாது. தேவன் எதற்காக பகுத்தறிவைக் கொடுத்தாரோ அந்த அறிவை அவர் காட்டியுள்ள வழிகளுக்காக விசாலமாக்கிக் கொள்ள வேண்டும். இதில் ஒரு மாற்றம் வர வேண்டுமென்றால் அவர்களிடம் குர்ஆனின் போதனைகள் செல்ல வேண்டும்.

................................................

நீங்கள் இயேசுவை முஸ்லிம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கிறிஸ்த்துவத்தை யார் உருவாக்கியது? kabmabulattyahoodotcom

கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டு முஸ்லிமாக இருந்து இஸ்ரவேலர்களிடம் *கர்த்தரின் பக்கம் திரும்புங்கள்* என்று பிரச்சாரம் செய்த இயேசு, கிறிஸ்த்தவம் என்ற எந்த ஒரு தனிமதத்தையும் உருவாக்கவில்லை. அவ்வாறு துணியும் அதிகாரம் அவருக்கு இல்லை.

வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! கர்த்தர்் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா(இயேசு) எனும் மஸீஹ் கர்த்தரின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே கர்த்தரையும்், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

மஸீஹும், நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிக் கொள்ள மாட்டார்கள். அவனுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விலகிப் பெருமையடிப்போர் அனைவரையும் அவன் தன்னிடம் ஒன்று திரட்டுவான்.(அல்குர்ஆன் 4:171-172)

கிறிஸ்த்தவ மதம் என்பது இயேசுவோடு சம்பந்தப்பட்டதல்ல. அவருக்கு பின் 'அவரது பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டேன்' என்று சொல்லிக் கொண்டு வெளிபட்ட பவுல் தான் கிறிஸ்த்தவத்தின் தந்தை - நிறுவனர். பவுல் என்பவர் இல்லையென்றால் உலகில் இன்றைக்கு கிறிஸ்த்தவம் என்பது இருந்திருக்காது. மாறாக இயேசுவின் உண்மையான அழைப்பும் போதனைகளும் ஓரளவு மக்களுக்குக் கிடைத்திருக்கும். பவுல் வந்தவுடன் அந்த மக்களால் இயேசு மறக்கடிக்கப்பட்டு பவுல் உருவாக்கிய இயேசுவே மக்களிடம் முன்னிருத்தப்பட்டு விட்டார். எனவே கிறிஸ்த்துவத்திற்கும் இயேசு என்று அழைக்கப்படும் அந்த இறைத்தூதருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

....................................................

முஸ்லிம்கள் குர்ஆனை holy quran என்கிறோம் கிறிஸ்த்தவர்கள் பைபிளை holy bible என்கிறார்கள் கிறிஸ்த்தவர்களின் அந்த நம்பிக்கையை நாம் மறுக்கலாமா..? rafeeqrauoofa(att)gmaildotcom

ஒவ்வொருவரும் அவர்கள் நம்பும் ஒன்றை புனிதம் என்று கருதுவது அவர்களின் விருப்பத்தை சார்ந்தது என்றாலும் பைபிளைப் பற்றி நாம் கருத்து வைப்பதற்கு காரணம் இறைவேதம் என்ற தகுதியில் அது இல்லை என்பதால் தான்.இறை வேதம் என்று அறிமுகப்படுத்தப்படும் ஒன்றில் எதுவெல்லாம் இருக்கக் கூடாதோ அவைகள் பரவலாக பைபிளில் கிடைக்கின்றன.வரலாற்றுக் குழப்பங்கள், முரண்பாடுகள், பச்சையாக விவரிக்கப்படும் பாலியல் கதைகள், மாமனாருக்கு மருமகளுடன் தொடர்புப் பற்றி கிறிஸ்த்தவர்கள் புனிதமாக கருதும் பைபிள் இப்படி விவரிக்கின்றது.
அப்பொழுது ''உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது?'' சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்து போட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக் கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுக்களுக்கு முன்பாக உட்கார்ந்தாள். யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா? என்றான். அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்க வேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, எழுந்து போய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக் கொண்டாள். (ஆதியாகமம் 38:13-29)

மாமனாருடன் மாமனாருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு குழந்தைப் பெற்ற இந்த தாமாரின் வம்சத்தில் தான் இயேசு பிறந்தார் என்று பைபிள் கூறுகின்றது

மகள் தந்தைக்கு மதுவைக் கொடுத்து தன்னைக் கர்ப்பவதியாக்கிக் கொண்டது என்று பட்டியல் போடலாம்.

புனிதத்துவத்தை தீர்மானிப்பதில் கிறிஸ்த்தவ உலகில் ஏற்பட்டு நிற்கும் மாறுபாடுகளையும் இங்கு சுட்டிக் காட்டலாம்.

கத்தோலிகர்களிடம் உள்ள பைபிளில் 73 தொகுப்புகள் உள்ளன. இதை அவர்கள் புனிதம் என்று கருதுகிறார்கள். ஆனால் கிறிஸ்த்தவர்களில் உள்ள புரோட்டஸ்டண்ட் களிடம் உளள பைபிளில் 66 தொகுப்புகளே உள்ளன. கத்தோலிகர்களிடம் உள்ள கூடுதலான 7 தொகுப்புகளை இவர்கள் நிராகரித்து விட்டனர்.

கர்த்தருடை வார்த்தைகளுடன் ஒன்றையும் கூட்டாதே கூட்டினால் அவர் உன்னை கடிந்துக் கொள்வார் என்று பைபிள் கூறுகின்றது. (நீதிமொழிகள் 30:5)

இப்போது கத்தோலிகர்களிடம் உள்ளது கர்த்தரின் வார்த்தைகளா.. அல்லது புரோட்டஸ்டண்ட்களிடம் உள்ளது கர்த்தரின் வார்த்தைகளா..என்றெல்லாம் கிறிஸ்த்தவ உலகம் சிந்தித்தால் பைபிள் புனிதமானது என்ற நம்பிக்கையை அவர்கள் மறு பரிசீலனை செய்யத்துவங்கி விடுவார்கள்.

முஸ்லிம்களைப் பொருத்தவரை நாம் இயேசு(ஈஸா) விற்கு கர்த்தரால் ஒரு வேதம் கொடுக்கப்பட்டது என்பதை நம்புவோம். ஆனால் அது பைபிளல்ல. அந்த வேதம் அந்தகாலத்து மதகுருமார்களுக்கு தேவையான அளவு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இறைவேதத்தில் நீக்குவதும் சேர்ப்பதும் அவர்களைப் பொருத்தவரை சாதாரணமாகி விட்டது. இன்றைக்கும் கூட பைபிளின் சில பகுதிகளை நீக்க கிறிஸ்த்தவ உலகில் சில மேலிடங்கள் யோசித்து வருகின்றன. இத்தகைய காரணங்களால் தான் நாம் பைபிளை புனித வேதமல்ல என்று கூறி வருகிறோம்.

பைபிள் தொகுக்கப்பட்ட வரலாறு கட்டுரை வெளிவரும். அதில் உங்களுக்கு மேலதிக விளக்கங்கள் கிடைக்கும்.

.............................................................

கிறிஸ்த்தவர்களை முஸ்லிம்களாக மாற சொல்வதை என் கிறிஸ்த்தவ நண்பர் மறுக்கிறார். ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களாகிய நமக்கு மத்தியில் இந்த பாகுபாடு ஏன் என்று கேட்கிறார். என்ன பதில் சொல்வது? mmsafi20(att)hotmaildotcom

எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கில் ஒருவர் மதம் மாறுவதையோ இன்ன பிற உலக ஆசைகளுக்காக மதம் மாற எண்ணுவதையோ இஸ்லாம் அடியோடு மறுக்கின்றது. நித்திய ஜீவன் என்றக் குறிக்கோளும், அதற்கான தேடலும் இருந்து உண்மையை கண்டு மனமாற்றம் அடைவதே உண்மையான மாற்றமாகும். அத்தகைய மாற்றத்தையே இஸ்லாம் விரும்புகின்றது.

இயேசு உங்கள் பாவங்களுக்கான தம்மை பலியாக்கிக் கொண்டார், இயேசுவை விசுவாசிப்பதே நித்திய ஜீவன், இயேசுவின் பக்கம் மனம் திரும்புங்கள் என்று சில சுலோகங்களை திரும்ப திரும்ப மீடியாக்கள் வழியாக கிறிஸ்த்தவ மக்களிடம் கொண்டு போய் ஒருவித மயக்கத்தை மத போதகர்கள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் பைபிளின் அனைத்துப் பகுதிகளையும் ஆழ்ந்து படித்து பரிசீலியுங்கள் என்ற திறந்த மனப்பான்மையோடு கிறிஸ்த்தவ போதகர்கள் பிரச்சாரம் செய்து தம் மக்களைத் தூண்டட்டும் பார்க்கலாம்.

நாம் கிறிஸ்த்தவர்களை இஸ்லாத்தை நோக்கி அழைக்கின்றோம் இதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் ஏற்றுக் கொண்ட இயேசு, மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்தார். *கர்த்தரை மட்டும் வணங்கி அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழுங்கள்* என்ற இஸ்லாத்தின் அடிப்படையான போதனையே இயேசுவின் போதனையாக இருந்தது.

கிறிஸ்த்தவர்கள் மனமுரண்டாக இஸ்லாத்தை நிராகரித்தே வருகின்றார்கள். உண்மையில் இஸ்லாம் குறித்து ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வருகின்றார்களா என்றால் அதுதான் இல்லை. ஆண்டாண்டுக் காலமாக மதகுருக்களின் இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியும் மேற்கத்திய மீடியாக்களின் இஸ்லாத்திற்கெதிரான சூழ்ச்சிகளும் அவர்களின் மனங்களில் வேறூண்றியுள்ளன.

இந்த நிலை மாற வேண்டும். அவர்கள் இஸ்லாம் குறித்த ஆய்வில் (தப்பான மனநிலையோடு அனுகாமல்) இறங்க வேண்டும். இஸ்மவேலின் வழிதோன்றலில் வந்த முஹம்மத் அவர்கள் பரலோக ராஜ்யத்தின் மீட்சிக்கான வழியை காட்டி சென்றுள்ளார்கள். இயேசுவின் பணியையும் யூதர்களால் இயேசுவுக்கு ஏற்பட்ட இன்னல்கள், இயேசுவுக்கு கர்த்தரிடம் இருந்து கிடைத்த பாதுகாப்பு, இறுதி தீர்ப்பு நாளின் அடையாளமாக இயேசுவின் வருகை குறித்தெல்லாம் விளக்கமாக சொல்லி விட்டு சென்றுள்ளார்கள்.

மேற்குலக மீடியாக்களின் வண்யுக்தியை புறக்கணித்து ஒரு ஆய்வாளனாக குர்ஆனையும் முஹம்மத் அவர்களின் வாழ்க்கையையும் படிக்கத் துவங்கும் எந்த கிறிஸ்த்தவரும் இஸ்லாம் மீதான கடந்தக் கால தம் எண்ணங்களுக்காக நிச்சயம் வருந்துவார். குர்ஆன் மீதும் முஹம்மத் அவர்களின் மீதும் தாம் கொண்டிருந்த தப்பபிப்ராயத்திற்கு தேவனிடம் பாவமன்னிப்புக் கேட்பார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger