Sunday, April 3, 2011

பத்ருபோர் சில காட்சிகள்

இறைத்தூதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்காவில் 13 ஆண்டுகளும் அதன் பிறகு மதினாவில் 10 ஆண்டுகளும் வாழ்ந்தார்கள். மதீனாவில் ஒரு ஆட்சியை அமைத்து இறை சட்டங்களை நிலை நாட்டி வாழ துவங்கிய போது கூட எதிரிகளின் தொல்லை கொடுக்கும் மனப்பான்மையிலிருந்து இறைத்தூதரும் அவர்களின் சக தோழர்களும் தப்பவில்லை. இதன் காரணமாக எதிரிகளோடு பல தற்காப்பு போர்களை மேற்கொள்ள வேண்டி வந்தது. இதில் முதலாவதாக நடைப்பெற்ற போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக பிரசித்திப்பெற்ற 'பத்ரு போர்' ஆகும்.

1, நபி(ஸல்) நேரடியாக களத்தில் நின்று எதிரிகளை சந்தித்த போர்கள் மொத்தம் 19 ஆகும்.  (ஜைத் பின் அர்கம்(ரலி) புகாரி 3949) அதில் முதலாவது போர் பத்ருதான்.

2, பத்ரு போர் ஹிஜ்ரி 2, ரமளான் மாதத்தில் பிறை 17ல் நடைப் பெற்றது.

3, குர்ஆனின் 3:123முதல்127வரையுள்ள வசனங்கள், 8:7,9-13வரையுள்ள வசனங்கள் பத்ரு பற்றி பேசுகின்றன. (இப்னு மஸ்வூத்(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 3952,3953,3954)

4, பத்ரு போரில் 60க்கும் கூடுதலான முஹாஜிர்(மக்காவாசி)களும், 240க்கும் கூடுதலான அன்சாரி(மதினாவாசி)களும் கலந்துக் கொண்டனர். (பரா இப்னு ஆஸிப்(ரலி) புகாரி 3956,3957,3958)

5, குர்ஆனின் 22:19,20,21 ஆகிய வசனங்கள் பத்ருபோரின் ஆரம்ப நிலை குறித்து இறக்கப்பட்டது. (அலி(ரலி) அபுதர்(ரலி) புகாரி 3965,3966,3967)

6, பத்ரு களத்தில் கலந்துக் கொள்ள போர்கவசங்களுடன் ஜிப்ரயீல்(அலை) இறங்கி வருவதை நபி(ஸல்) அறிவிக்கிறார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரி 3995)

7, அபூஜஹல் என்ற பெரிய எதிரியை பத்ரில் கொன்றவர்கள் முஆத், முஅவ்வித் என்ற இரு சிறுவர்கள். (அனஸ்(ரலி) புகாரி 3962,3963,3988,4020)

8, 24 காபிர்களின் சடலங்கள் பத்ரு போர் நடந்த இடத்திலுள்ள கிணற்றில் தூக்கிப் போடப்பட்டன. 'நான் சொன்னதெல்லாம் உண்மை என்பதை இப்போது உணர்கிறீர்களா..' என்று நபி(ஸல்) கேட்டார்கள். (ஆய்ஷா(ரலி) அபூதல்ஹா(ரலி) இப்னுஉமர்(ரலி) புகாரி 3976,3980,4026)

9, பத்ரில் கொல்லப்பட்ட ஹாரிஸா பின் சுராகா(ரலி)க்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என நபி(ஸல்) நன்மாராயம் கூறுகிறார்கள். (அனஸ்(ரலி) புகாரி 3952)

10, ஒரு திருமணத்தின் போது பத்ரு போரில் கொல்லப்பட்டவர்களை புகழ்ந்து சிறுமிகள் தப்ஸ் அடித்து பாட்டுப்பாடுகிறார்கள். (பின்த் முஅவ்வித் - புகாரி 4001)

11, பத்ரு போரில் கலந்துக் கொண்ட முஹாஜிர்களுக்காக போர் செல்வத்திலிருந்து 100 பங்கு ஒதுக்கப்பட்டது. (ஜூபைர் பின் அவாம்(ரலி) புகாரி 4027)

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger