Sunday, April 3, 2011

நபி(ஸல்) பற்றிய முக்கிய குறிப்புகள்

இறைவன் புறத்திலிருந்து இறுதித் தூதராக அனுப்பப்பட்ட நமதுத்தலைவர் முஹம்மத்(ஸல்) அவர்களின் அழைப்புப் பணி பல சூழல்களையும் காலக்கட்டங்களையும் உள்ளடக்கியதாகும். அவற்றை அறிந்து வைத்துக் கொள்வதற்காக சுருக்கமாகத் தொகுத்துள்ளோம்.

ஆரம்ப கால கட்டம்.

ஹிராக் குகையில் ஜிப்ரயீல் அவர்களை முதலாவதாக சந்தித்து திடுக்கிட்டு மனைவி கதீஜாவை சந்தித்து விளக்கியது முதல் '...உம்முடைய நெருங்கிய உறவினருக்கு அச்சமுட்டி எச்சரிக்கை செய்வீராக..' என்ற (26:214) வசனம் இறங்கும் வரையுள்ளது. (முதல் மூன்று வருடங்கள்)

இந்த காலகட்டம் பிரச்சாரத்தின் முதல் நிலையாக இருந்ததால் மிகுந்த கவனம் கையாளப் பட்டது. பிரச்சார வகுப்புகளில் ரகசியம் பேணப்பட்டன. குறைஷிகளுக்கு இப்படியும் அப்படியுமாக இதுப்பற்றிய செய்திகள் எட்டினாலும் அவர்கள் பெறிய அளவு அதை பொருட்படுத்தவில்லை.

இஸ்லாத்தை ஏற்று ஈமானின் சுவையை உணர்ந்தவர்கள் தாமாகவே காபிர்களுடனான உறவை தவிர்த்துக் கொள்ள துவங்கினர். எதிர் கொள்கைப் பற்றி கடும் விமர்சனத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி நின்றனர்.

ஆரம்ப கால கட்டத்தின் இறுதி பிரிவில் இயக்கத்திற்கான அடித்தளப் பணிகள் மிக கவனமாக பரிசீரிக்கப்பட்டு அதற்குறிய ஆட்கள் தேர்வு செய்யப் பட்டனர். சுவர்க்கத்தைக் கொண்டு சுப செய்தி கூறப்பட்ட பத்துப் பேர்களில் ஒன்பது பேர் இந்த தேர்வில் அடங்கி விட்டனர். உமர்(ரலி) அவர்கள் இந்த முதல் கட்டத்திற்கு பிறகே இஸ்லாத்தை தழுவினார்கள்.

இறைவனை வணங்கும் மறை மறைவாகவே பயிற்றுவிக்கப்பட்டன.

ஆரம்பக்கட்ட இஸ்லாமிய இயக்கப் பணியில் இணைந்தவர்களில் கால்வாசிப் பேர் பெண்களாவர்.

இரண்டாம் கால கட்டம்.

பகிரங்கப் பிரச்சாரத்திற்கான உத்தரவு வருதல். இந்த கால கட்டத்தில் இரு பெரும் பண்புகள் குறித்து குடுதல் கவனமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

1) இஸ்லாமிய பிரச்சாரம் சென்றடைய வேண்டிய மக்களின் எதிர் உணர்ச்சிகள், கோப தாபங்கள், ஏச்சு பேச்சுகள் எதையும் பொருட்படுத்தத் தேவையில்லை.

2) தம்மை எதிரிகளாக பார்ப்போரின் எத்தகைய துன்பங்களையும் மிகப் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுதல்.

கலந்தாலோசனைகளும், பிரச்சாரத்திற்கு திட்டமிடுதலும் மறைமுகமாகவே இருந்தன.

இறை நம்பிக்கையின் மீதான வாழ்க்கையிலும், செயல்பாடுகளிலும் உறுதி கூட்டப்பட்டன.

இறைத்தூதர் மக்காவிலிருந்த பத்தாண்டு வாழ்க்கையில் இரண்டாம் கட்டம் ஏழு ஆண்டுகளைக் கொண்டதாகும். இதில் ஐந்தாம் ஆண்டு, கொள்கையை காத்துக் கொள்வதற்கதாக முதல் நாடுதுறந்தல் என்ற ஹிஜ்ரத் பயணம் எத்தியோப்பியாவை நோக்கி புறப்பட்டது.

மூன்றாம் கால கட்டம்.

பிரச்சாரத்தின் சாதக பாதகங்கள் தெளிவாக உணரப்பட்ட நிலையில் சுற்றுப்பகுதியில் ஆதரவை எதிர்பார்த்தலும். இறைவன் புறத்திலிருந்து வலுவான உதவியும்.

மக்கத்து அறிவீலிகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளான நிலையில் பிரச்சார மையத்திற்காகவும், இறை கட்டளைகளை செயல்படுத்துவதற்காகவும் ஒரு வலுவான அடித்தளம் அமைக்கும் நோக்கில் தாயிப்பைப் பற்றிய இறைத்தூதரின் நம்பிக்கையும் அங்கு சென்று பெற்ற அனுபவமும். சற்றும் தயங்காமல் பல்வேறு கோத்திரத்தாரின் உதவிக்காக அணுகுதல்.

மிகுந்த இடர்பாடுகளை சந்தித்துக் கொண்டிருந்த இந்த சூழலில் தான் மதீனாவிலிருந்து உதவிக் கரங்கள் நீண்டன.

மதீனத்து மக்களின் மிகச் சிறு குழுவுடன் முதலாம் உடன்படிக்கையும், ஓரளவு இடை வெளிக்குப் பின்னர் இரண்டாம் உடன்படிக்கையும் நடந்தன. இது அகில உலகத்திற்கும் ஏற்ற ஒரு இஸ்லாமிய அரசை தோற்றுவிக்க முதல் அடித்தளமாக அமைந்தது.

நான்காம் கால கட்டம்.

மதீனாவை நோக்கிய நபிகளாரின் ஹிஜ்ரத்திலிருந்து இது துவங்குகிறது.

மதீனாவின் ஒழுங்குகளை சீரமைத்து மக்களை கட்டமைத்து தாய் பூமியான மக்காவின் நிலவரம் குறித்து சிந்தித்தல்.

பத்ர், உஹது, அஹ்ஸாப் மற்றும் சிறு சிறு யுத்தங்களை கண்ட கால கட்டம் இது.

யூதர்களோடு மிக கவனமாக நடந்துக் கொண்டார்கள்.

உள்நாட்டு எதிரிகளான நயவஞ்சக கூட்டத்தை கண்டறிவதிலும், களை எடுப்பதிலும் அக்கறைக் கொள்ளப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் மிக சக்தி மிக்க ஊடகமாக இருந்த கவிதை எதிரிகளை வீழ்த்துவதற்காக தேவைக்கேற்ப பயன் படுத்திக் கொள்ளப்பட்டது.

அகழ் யுத்தத்திற்கு பிறகு முஸ்லிம்களின் வலு கூடகிறது.

ஐந்தாம் கால கட்டம்.

ஹூதைபியா உடன்படிக்கையின் விளைவாக மக்கத்து அறிவீலிகளின் கொள்கையும், கர்வமும் ஆட்டம் காண துவங்கியது. மன ரீதியாக ஒரு பெரும் போராட்டத்தை மக்கத்து அறிவீலிகளுக்கு மத்தியில் தோற்றுவித்தது இந்த உடன் படிக்கை.

பல தீய திட்டங்களோடு ஆங்காங்கே வாழ்ந்த யூதர்கள் முற்றாக அரபுலகை விட்டு வெளியேற்றப் பட்டார்கள்.

தபூக் யுத்தத்தில் ரோமர்களை வெற்றிக் காணல்.

சுற்று வட்டாரத்தை கடந்து நின்ற சர்வாதிகார அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக இஸ்லாமிய அழைப்பையும், கட்டுப்படுவதின் அவசியத்தையும் வலியுறுத்தல்.

அரபகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்று பெரும் சக்தியாக உருவெடுத்தல்.
இஸ்லாத்தை இனி வெல்ல முடியாது என்பதையும், சர்வதேச மனிதத்துவத்தின் மீதான அதன் ஆளுமை மற்றும் கொள்கையின் விளக்கம் என்ன என்பதையும் பிரகடனப் படுத்தும் முகமாக அமைந்த இறுதித் தூதரின் ஹஜ் பயணமும் அங்கு நிகழ்த்தப்பட்ட உரையும்.

பெரும் உழைப்பால் இஸ்லாமிய இயக்கம் முழுமைப் பெற்றப் பிறகு இறைவனின் அழைப்பால் நிகழ்ந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் மரணம்.
 
இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கு

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்

தொகுப்பு: ஜி.என் 

***************** 

இறைத்தூதர் முஹம்மத் (ஸல்)அவர்களின் வாழ்க்கையை நாம் மூன்று பகுதிகளாகப்  பிரிக்கலாம்.

1)பிறப்பு முதல் நபித்துவம் வரை.
2)நபித்துவம் முதல் நாடு துரத்தல் வரை.
3)மதினா முதல் மரணம் வரை.
(பகுதி ஒன்று)

> கி.பி 571ல் பனுஹாஷிம் பள்ளத்தாக்கில்-மக்கா நகரில்-ரபிவுல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை பிறந்தார்கள்.(பிறை 12ல் பிறப்பு என்பதற்கு ஆதாரபபூர்வமான எந்த குறிப்பும் இல்லை)


> தன் தாய் ஆமினா விடமும்,செவிலித்தாய் ஹலிமாவிடமும் பால் குடித்து வளர்ந்துள்ளார்கள்.

> 4 வயதில் விளையாடும்போது ஜிப்ரயீல் வந்து நெஞ்சை பிளந்து இதயத்தைத் தூய்மைப் படுத்தினார்கள். (இந்த செய்தி பல குர்ஆன் வசனங்களுக்கும் சில ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் மாறுபடுவதால் இதை ஏற்க வேண்டியதில்லை)


> 8 வயதில் பாட்டனார் மரணித்தப் பிறகு சிறிய தந்தை அபுதாலிப் அவர்களின் மேற்பார்வையில் வாழ்க்கை.

> 12 வயதில் சிறிய தந்தையுடன் வியாபாரத்தில் ஈடுபடல்.(ஒருமுறை சிறிய தந்தையோடு ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்கு போகும்போது பஹீரா என்ற துறவி -இவர் இறுதித் தூதர் என்று முன்னறிவிப்பு செய்கிறார் இப்படிஒரு செய்தி திர்மிதி-ஹாக்கிம் ஆகிய நூல்களில் இடம் பெறுகிறது. ஆனாலும் இவை ஆதாரப் பூர்வமான செய்திகளல்ல)

> 20 வயதில் குறைஷ், கைஸ் கோத்திரங்களுக்கு மத்தியில் நடந்த ஹிஸ்புல் புளுல் என்ற பாதுகாப்பு ஒப்பந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

> 25 வயதில் கதீஜா என்ற பெண்மணியிடம் வியாபாரியாக வேலை. அதே ஆண்டு 40 வயதான அந்தப் பெண்மணியின் விருப்பத்திற்கிணங்கி அவரை முதல் மனைவியாக ஏற்றுக் கொண்ட திருமணம்.

> 35 வயதில் இறை இல்லமான கஃபா புதுப்பிக்கும் பணி. ஹஜருல் அஸ்வத் என்ற கருப்புக்கல் பிரச்சனையில் பெரும் சர்ச்சை எழ அதை சுமூகமாக தீர்த்து வைத்தல்.

> 37 வயதில் தனிமை விருப்பம் ஏற்பட்டு ஹிரா குகையை தேர்ந்தெடுத்து அங்கு சென்று தங்குதல்.

(பகுதி இரண்டு)

> 40 வயதில் ஜிப்ரயீலுடன் முதல் சந்திப்பு. இறைத்தூதராக நியமிக்கப் படுகிறார்கள். குர்ஆன் வசனம் இறங்குகிறது.ஏகத்துவத்தை நோக்கி இரகசிய அழைப்பு.

> 44 வயதில் தன் மீதும் முதல் விசுவாசிகள் மீதும் மக்காவின் எதிர்ப்பாளர்களின் துன்புறுத்தல் அதிகமாதல்.

> 45 வயதில் இறைத்தூதரின் கட்டளைப்படி இரு குழுக்களின் முதல் ஹிஜ்ரத் எத்தியோப்பியாவை நோக்கி.

> 46 வயதில் உமர் மற்றும் ஹம்ஸா ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றல்.

> 47 வயதில் அபு தாலிப் பள்ளத்தாக்கிற்கு விரட்டப்படுகிறார்கள். புகலிடம் அளித்ததற்காக பனு ஹாஷிம் பனு முத்தலிப் கூட்டத்தினரும் ஊர் விலக்கம் செய்யப்பட்டனர்.

> 50 வயதில் தனக்கு பெரும் துணையாக இருந்த சிறிய தந்தை அபுதாலிபும் அருமை மனைவி கதீஜாவும் மரணமடைகிறார்கள். நபி(ஸல்)அவர்களுக்கு அது துக்க ஆண்டாகவே காட்ச்சியளித்தது.

> 51 வது வயதில் மக்காவிற்கு வெளியே தன் பிரச்சாரத்தை துவங்கி தாயிப் செல்கிறார்கள். அங்கு கடினமான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மக்காவிற்கு வெளியில் சந்தை கூடும் இடங்களுக்கு வரும் மக்களையும் ஹஜ்ஜுக்கு வரும் மக்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்கள். மதீனாவில் இஸ்லாமிய சிந்தனை எட்டுகிறது. ஆய்ஷாவுடன் திருமணம்.

> 52 வயதில் மக்காவிலிருந்து விண்வெளிப் பயணம் தொழுகை கடமையாகிறது.

> 53 வயதில் இரண்டாவது பைஅத்துல் அகபா நடைப் பெறுகிறது.

(பகுதி மூன்று)

> 53 வயதில் முதல் குழுவாக முஸ்லிம்களும் தொடர்ந்து இறைத்தூதரும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம். இஸ்லாமிய புதிய வரலாற்றுக்கான துவக்கம். அமோக வரவேற்புடன் மதினாவின் புதிய சாசனம் வரையறுக்கப்படுகிறது.

> 54 வயதில் பத்ரு யுத்தம், இறை நிராகரிப்பவர்கள் 1000 பேரை முஸ்லிம்கள் 313 பேர்கள் யுத்தகளத்தில் சந்தித்து வெற்றிப் பெறுகிறார்கள்.(ஹி: 2)

> 55 வயதில் உஹது யுத்தம், 3000 இறை நிராகரிப்பவர்களை 700 முஸ்லிம்கள் களத்தில் சந்திக்கிறார்கள். சில காரணங்களால் முஸ்லிம்களுக்கு நிறைய இழப்பு. (ஹி: 3)

> 58 வயதில் பனு முர்ரா, கத்பான், கிஸ்ரா கோத்திரங்கள் அடங்கிய 10,000 பேர்களுடன் 3000 முஸ்லிம்கள் போர் செய்கின்றனர். இதுதான் (கந்தக்) அகழ் யுத்தம். இதில் முஸ்லிம்களுக்கு வெற்றி.(ஹி: 5)

> 59 வயதில் தனது 1400 தோழர்களோடு உம்ரா செய்ய மக்கா செல்ல ஹூதைபியா என்ற இடத்தில் மக்காவின் இறை நிராகரிப்பவர்களால் தடுக்கப்பட்டு ஹூதைபியா உடன்படிக்கை நடக்கிறது.(ஹி: 6)

> 60 வயதில் கைபர் போர் யூதர்களுடன். முஸ்லிம்கள் வெற்றிப் பெறுகிறார்கள். (ஹி: 7)

> 61 வயதில் யுத்தம் எதுவுமின்றி முஸ்லிம்கள் தம் சொந்த மண்ணான மக்காவை வெற்றிக் கொள்கிறார்கள்.(ஹி: 8)

> 62 வயதில் முஸ்லிம்களை ஒழிக்க 40,000 ரோமர்கள் தபூக் வருகிறார்கள், இவர்களை 30,000 முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடி பெறும் வெற்றிப் பெறுகிறார்கள்(ஹி: 9)

> 63 வயதில் ரபிவுல் அவ்வல் பிறை 12ல் தனது இறைத்தூதர் பணியை நிறைவு செய்து மரணமடைகிறார்கள்.

(இன்னாலில்லாஹி..............................)

> 6 வயதில் மதினாவிலுள்ள தன் கணவரின் மண்ணறையை ஜியாரத் செய்து விட்டு மக்கா திரும்பும் வழியில் அப்வா என்ற இடத்தில் தாயார் ஆமினாவின் மரணம். பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொருப்பில் வாழ்க்கை.
> அபுலஹப் பிறந்த விழா கொண்டாடினான் என்பது - அல் குர்ஆனின் 111 வது அத்தியாயத்திற்கு மாற்றமான ஆதாரமற்ற செய்தியாகும்.

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger