Sunday, April 3, 2011

சம உரிமை! எழும் கேள்விகள்?

இனி..

சமய சார்பற்ற ஒரு நிலையை ஏற்படுத்தி பெண்களுக்கான சம உரிமைகளை வழங்கினால், இன்றுவரை வழங்கப்பட்டிருப்பதால் ஏற்படும் விளைவுகளைக் காண்போம்.

‘சமஉரிமை’ என்ற வார்த்தை கேட்பதற்குப் புரட்சிகரமாகவும், அறிவு ஜீவிகளுக்கு ஆனந்தமாகவும், அறியாப் பெண்களுக்கு இனிமையாகவும் இருக்கும் என்பதை எவரும் மறுக்க மாட்டார். மாதர் சங்கங்கள், பெண்ணுரிமை இயக்கங்கள் கூட சம உரிமை என்ற சல்லாபச் சொற்களுக்கு தம் மனதைப் பறிகொடுத்து ஆங்காங்கே மாநாடுகள், கருத்தரங்கங்கள், கூட்டங்கள், ஆய்வு நிகழ்ச்சிகள், உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் போன்றவைகளை நடத்துவதை காண்கிறோம்.

பெண்களின் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக எந்தெந்த முயற்சிகளெல்லாம் எடுக்க வேண்டுமோ அதையெல்லாம் எடுக்கலாம். தவறில்லை. வரதட்சனைக் கொடுமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது, பெண்சிசு கொலையைத் தடுப்பதற்காகப் போராடுவது, கல்வி தரத்தில் முன்னேற்றம் ஏற்பட பாடுபடுவது, வேலை வாய்ப்பிற்காக முயற்சிப்பது… இப்படிப்பட்ட அத்தியாவசியமான தேவைகளுக்கு முயற்சிப்பது காலத்தில் அவசியமாகும். அதே சமயம், சம உரிமை என்ற பெயரில் பெண்களுக்குச் சீரழிவையும், நிரந்தரமான பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடாதீர்கள் என வேண்டுகிறோம்.

பெண்கள் கல்வி கற்பது, வேலைக்கு செல்வது, திறம்பட நிர்வகிப்பது, பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, டாக்டர்களாக, விமான பணிப்பெண்களாக, போலீஸ்களாக, உயர்மட்ட அதிகாரிகளாக, எஞ்சினியர்களாக, கவிஞர்களாக, விஞ்ஞானிகளாக, அரசியல் வல்லுணர்களாக… இப்படிப்பட்ட எந்தத் துறையில் வேண்டுமானாலும் அவள் மின்னலாம், பிரகாசிக்கலாம், ஆண்களோடு விவாதிக்கலாம், அறிவைப் பெருக்கலாம். இந்த எதற்குமே இஸ்லாத்தில் தடை இல்லை. அதேசமயம் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ‘தான் ஒரு பெண்’ என்ற நிலையை மறந்து எல்லையைத் தாண்டுவதைத்தான் இஸ்லாம் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கான காரணம்… அவள் தன்னைத்தானே சீரழித்துக் கொள்ளக் கூடாது என்பதுதான்.

சோஸலிஷம் என்ற ஆண்-பெண் இரண்டரக் கலப்பு வாழ்க்கையை இஸ்லாம் விரும்பவில்லை. அதை இஸ்லாம் விரும்பாததற்குறிய காரணமும், இவர்கள் விரும்புவதற்குரிய காரணமும் இல்லாமல் இல்லை. பர்தாவால் பெண்ணுரிமை பறிக்கப்படுகிறது என்ற இவர்களது கூச்சல், பெண்ணுரிமையை காக்க வேண்டுமென்பதற்காக அல்ல, பர்தாவிற்குள் மறைந்திருக்கும் பெண்அழகை, அவளது கவர்ச்சிப் பிரதேசங்களை காணமுடியவில்லையே, தனது சிற்றின்ப நினைவுகளுக்கு தீனி போட முடியவில்லையே என்பதுதான்.

இறைவன் ஆணையும்-பெண்ணையும் மனித இனமாகவே படைத்தாலும், இருவரின் உடல்வாக்கில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளான். அந்த வித்தியாசம் ஆண்களின் உணர்வை சாதாரணமாக வைக்கக்கூடியவையல்ல. இயற்கையிலேயே ஆண் வலிமைமிக்கவனாக படைக்கப்படுகிறான். அந்தப் படைப்போடு சேர்த்து அவனது கடின உழைப்பு அவனது உடலை முறுக்கேற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்ததும், இனியும் தனது வாலிபத்திற்குத் தீனி போடாமல் இருக்க முடியாது என்று வரும்போது வடிகால்களைத் தேடி அலைகின்றான், விபச்சார விடுதிகளை நோக்கி ஓடுகின்றான். விபச்சார விடுதிகளை நாடாத ஒரு சில ஆண்களுக்கு வடிகால் தேவைப்படுகிறது. அவர்கள் என்ன செய்வார்கள்? வயிற்றுப்பசியைவிட முக்கியத்துவம் பெற்ற அந்த நேரத்தில் உடல்பசி அடங்க வேண்டும். எந்தப் பெண்ணாக இருந்தால் நமக்கென்ன, நம்முடைய தேவை பூர்த்தியாக வேண்டும் என்று அத்தகையோர் விரும்புகின்றார்கள். விளைவு. கற்பழிப்புகள், பெண்களுக்கு பாதிப்புகள்.

கற்பழிப்புகளுக்கு, பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாவதற்கு ஆண்களை மட்டும் குறைகூறி பிரயோஜனமில்லை. ஆண்களை சீண்டி, அவர்களின் உணர்வுகளைத் தூண்டக் கூடியதாக அமைந்த உடல்வாகும், அந்த உடல்வாகைத் திறம்பட ரசித்துக்கொள்.. அனுபவித்துக்கொள் என்று அழைப்பு விடும் அவர்களின் ஆடைகளுமேயாகும்.

ஆண்களின் இடைகளை வர்ணிக்காத கவிதை, அவர்களின் மார்பகங்கள்பற்றி எண்ணிப் பார்க்காத கவிதை, ஆண்களின் கன்னங்களையும் – உதடுகளையும் பற்றி மூச்சுவிடாத கவிதைகள், பெண்களின் ஒவ்வொரு அங்கத்தையும் பல்வேறு கோணங்களில் வர்ணிக்கிறதென்றால் முழு காம உணர்ச்சிகளும் அங்கே கொட்டிக்கிடப்பதை அறிவு உள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.

பேரூந்துகளில், திரை அரங்குகளில், புகையிரத நிலையங்களில், விமான நிலையங்களில், இன்னும் எங்கெல்லாம் கூட்டம் கூடுகின்றதோ அங்கெல்லாம் இடிப்பு ஹீரோக்கள் மிகுதியாக மொய்த்துக்கொள்வதற்கு என்ன காரணம்! இடித்துப் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும்தான். இப்படி எந்தெந்த வகையில் பெண்களுக்கு பாதிப்பை – தீராத இழிவை ஏற்படுத்த வேண்டுமோ, அத்தகைய இழிவுகளுக்கெல்லாம் தாளம் போடுவதற்காகத்தான் சோஷலிஸம் என்ற தபேலாக்களை தூக்கிக்கொண்டு ஆடுகிறார்கள்.

இதை மிகையாக எழுதவில்லை. கடந்த கால நிகழ்ச்சிகள் இதற்கு ஆதாரமாக இருக்கின்றன. ‘பர்தாவை’ குறைகூறுபவர்களும், கற்பழிப்பு – பெண்ணுரிமை பாதிப்புக்கு எதிராக சட்டங்கள் இயற்றியோரும் எந்த அளவுக்கு வெற்றி பெற்றார்கள்?.

ஒருபுறம் சட்டங்கள் புதிது புதிதாக பரிணாம வளர்ச்சி பெற்றாலும், பெண்களின் உடைகள் அந்த சட்டங்களுக்குச் சவால்விடுவதால், சக்கையாகப் பிழியப்பட்ட பெண்களிலிருந்து எத்தனைபேரை இந்த சட்டங்கள் காப்பாற்றியுள்ளன. சட்டங்கள் வேண்டும்.. அதாவது, பெண்களின் கற்பு சீரழிக்கபட்ட பிறகு சட்ட புத்தகங்களை திறந்து பார்ப்போர் ஒருபுறம். சட்டங்களிலுள்ள ஓட்டைகளைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, ஆண்களுக்கு சார்பாக வாதாடி பாக்கெட்டுகளை நிரப்பும் கருப்பு அங்கிகள் மறுபுறம். விளைவு… அரை நிர்வாணத்தில் பார்க்கும் இடமெல்லாம் பெண்களின் கூட்டம். எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்கிற ஆண்களின் ருசி மறுபுறம்.

இதுதான் சோஷலிஸ வாழ்க்கையா? பெண் உரிமைகளைப் பாதுகாக்கும் முறை இதுதானா? அறிவு ஜீவிகளே! முற்போக்குவாதிகளே(?) சிந்திக்க மாட்டீர்களா?

பர்தாவைக் காட்டிமிராண்டித்தனம் என்று வர்ணிப்போர், பர்தாவால் ஏற்படும் நன்மைகளைச் சிந்திக்கக் கூடிய அளவிற்கு அறிவு வளர்ச்சி பெறாதோர், அரைகுறை ஆடையால் ஆண்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு சிதைக்கப்பட்ட பெண்களின் எத்தனைபேரை உங்களின் ஜீவிதமான அறிவு காப்பாற்றி இருக்கின்றன? முற்போக்குத்தனமான சிந்தனை எத்தனை பெண்களுக்குப் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் அரணாக இருந்திருக்கின்றன. தகவல் உண்டா?

!பெண்ணுரிமை இயக்கங்கள்! என்றும் !மாதர் சங்கங்கள்! என்றும் பல்வேறு அமைப்புகள் இந்நாட்டில் இருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைவதற்காக ஏறபடுத்தப்பட்ட விடுதலை இயக்கங்களில் பெண்கள் பங்குபெற்றபோதே, பெண்ணுரிமை பற்றி சிந்தனை வந்து, பெண்ணுரிமைக்கான கழகங்கள் தோற்றுவிக்கப் பட்டன. கடந்த 50 ஆண்டுகளாக இவைகள் சாதித்தது என்ன? நாளுக்கு நாள் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கான வன்முறை கற்பழிப்பு தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்தியா டுடேயின் நடத்திய ஒரு அலசலை, பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலைக் கீழே தருகிறோம். பர்தாவுக்குள் அடைக்கலம் என்பது அடிமைத்தனம் என வாதிப்போர், பெண்களின் இந்த அவல நிலைக்கு ஆண்களின் வக்கிர புத்திக்கு என்ன பதில் அளிப்பார்கள்?

நேஷனல் கிரைம் ரிகார்ட் பீரோ தரும் தகவல்கள் (சதவீதங்களில்)

ஆண்டு        பாலியல்      விசாரணை          குற்றப்பத்திரிக்கை

வருடம்       வழக்குகள     மறுக்கப்பட்டவை     தாக்கல்             தேங்கி கிடைப்பபை
1988                       12.067                                     25               7,244                    3237
1989                        13.010                                      17               7,836                    3599
1990                       13.644                                      18               8,181                    3864
1991                           14.277                                   13               8,430                    4368

ஒவ்வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். (இதற்குக் காரணம்: கவர்ச்சியைத் தூண்டக்கூடிய அவர்களின் உடைகளே முக்கிய காரணம் என்பதை நாம் கவனத்தில் தொடர்ந்து நிறுத்த வேண்டும்) பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு ‘கற்பிழந்தவள்’ என்று தூற்றப்பட்ட பிறகு, சமூகத்தால் கேவலமாகப் பார்க்கப்பட்ட பிறகு, ஒருசில நூறு காமுகர்களுக்கு மட்டும் தாலாட்டும் தண்டனை கொடுக்கிறது சட்டம். பெண்ணுரிமை பேணப்படுவது இப்படித்தானா? இதற்குப் பெயர்தான் சம உரிமையா?

சம உரிமை என்பது எக்காலத்திலும் நடைமுறைக்கு ஒத்துவராத கூற்று. கோபிக்காதீர்கள். இதற்கு நியாயமான பல்வேறு காரணங்கள் உள்ளன. மாதர் சங்கங்களும், மகளிர் மன்றங்களும் பெண் பாதிப்பை என்னதான் எதிர்த்துப் போராடினாலும், அந்தப் பாதிப்புகள் தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். ஏனெனில், உங்களிடம் போராட்டம்தான் இருக்கின்றதே தவிர, இந்த போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன என்பது தெரியவில்லை.

ஆண் இயல்பிலேயே… வலிமைமிக்கவனாக, உடல் இச்சையின்மீது ஆவல் கொண்டவனாக படைக்கப் பட்டுள்ளான். இதை சாதாரண அறிவு படைத்தவனும் மறுக்க மாட்டான். அப்படிப் படைக்கப்பட்ட ஆண் வர்க்கத்தின் பார்வையில் பெண் எப்படி தன்னை வைத்துக்கொள்ள வேண்டுமோ (எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் விரிவாகக் கூறுகிறது. பின்னர் விரிவாகப் பார்ப்போம்) அப்படி வைத்துக் கொள்ளாமல் அந்த வரம்பைத் தாண்டும்போது அவள் தனக்குத்தானே அழிவுகுழி தோண்டிக் கொள்கிறாள் என்றுதான் பொருள்.

இஸ்லாம் பெண்களை பர்தா அணியச் சொல்வதன் காரணம்… அவளது உடல் அமைப்புதானே தவிர, சிந்தனை சக்திக்காகவோ மற்ற விசயங்களுக்காகவோ அல்ல. ஆண்களிலிருந்து உடல் ரீதியாக பெண்கள் பெறுத்த வேறுபாட்டில் படைக்கப்பட்டிருப்பதால் அந்த வேறுபாட்டைப் பாதுகாக்க வேண்டிய முறைப்படி பாதுகாக்கத் தவறினால் அது அவளுக்கே தீராத தீங்கை ஏற்படுத்தும் என்பதால் இஸ்லாம் பெண்களின் நலனைக் கருதி பர்தாவை அனுமதிக்கிறது.

ஆண்களை சுண்டி இழுக்கும் உடல்வாகை பெண் பெற்றிருக்கிறாள். அவளது அங்கங்களின் கன பரிமாணங்கள் வெளியில் தெரியும்போது அது ஆண்களின் ஒழுக்க வாழ்விற்கு பகிரங்க சவால் விடுகிறது. அந்த அங்கங்களைத் தொட்டுப் பார்க்கவும், ருசிக்கவும் ஆண் தவிக்கிறான். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய இந்த ஆண்களால்தான், பெண்களை வியாபாரப் பொருளாக பத்திரிக்கைகளும் விளம்பரங்களும் பயன்படுத்தி காசு சம்பாதிக்கின்றன.

சிகரெட் விளம்பரம் முதல் கருத்தடை சாதனம், மஞ்சள் பத்திரிக்கை, சினிமா சுவரொட்டடிகள், துணி விளம்பரங்கள், இன்னும் என்னென்ன விளம்பரங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்திலும் பெண்களைப் பயன்படுத்துவதற்கு காரணம் அவளின் உடல்வாகுதான். ஆண்களின் இச்சையைத் தூண்டக்கூடிய அவளின் உடல்வாகுதான் அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் தீர்வாகத்தான் ‘பர்தா’ முறை அமைந்திருக்கிறது.

‘சமஉரிமை’ என்ற சொல்லுக்கு அடிமைப்பட்டவர்களே! உங்களிடம் ஒரு சில கேள்விகள்:—-

ஆண்களோடு பெண்கள் சமம், வேறுபாடு இல்லை, வேறுபாடு வேண்டாம் என்கிறீர்கள். நீங்கள் ஆயிரம் விளக்கம் சொன்னாலும், ஆயிரம் போராட்டம் நடத்தினாலும் உடல் ரீதியில் ஆணும் பெண்ணும் வித்தியாசப்படுவதால், அந்த வித்தியாசத்தில் உங்களின் போராட்டம் எந்தப் பலனையும் ஏற்படுத்தப் போவதில்லை. விபச்சார விடுதிகள் ஆரம்பித்து, அதில் பெண்களை மட்டும் வைத்து அதை நோக்கி ஆண்கள் ஓடுவதிலிருந்து, பெண்களின் உடல் ஆண்களின் உள்ளத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சாதாரணமாக உணரலாம்.

ஆண்களும் பெண்களும் சமம் என்கிறீர்கள். சினிமா ஒரு மிகப்பெரிய மீடியா. பல லட்சக்காணக்கான மக்களை சென்றiடையக் கூடிய அந்த மீடியாவில் பெண்கள் எப்படி காண்பிக்கப்படுகிறார்கள்? ஆண்களுக்கு சமமாகவா? இல்லை. கவர்ச்சியாக வெறும் போதைப் பொருளாகக் காண்பிக்கிறார்கள். இதுதான் சம உரிமையா?

பர்தா அணிவதால் பெண்களின் உரிமை பரிபோகிறது, அதனால் ஆண்களைப் போன்று அவர்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கோஷம் மேலை நாடுகளிலும் எழுந்தது. இதை சில அறிவு ஜீவிகளும் சரிகண்டார்கள். அரசாங்கமும் அதைச் சரி என்று ஒப்புக்கொண்டது. இதன் விளைவு.. அமெரிக்கப் பெண்கள் ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். அதாவது, ஆண்கள் கீழாடை மட்டும் அணிந்து மேலாடை இல்லாமல் தெருக்களில் செல்வது போல், நாங்களும் மேலாடையின்றி தெருக்களில் செல்வோம் என்று கோஷம் எழுப்பினார்கள்.

இன்று இந்தியாவிலும், ‘ஆண்-பெண்ணுக்குள் பேதம் காட்டக்கூடாது, அவர்களுக்கு சம உரிமை வேண்டும், வித்தியாசப்படக் கூடாது’ என்று வாதிப்பவர்களே…. அமெரிக்கப் பெண்களின் போராட்டம் போன்று ஒரு போராட்டத்தில் நம் பெண்கள் இறங்கினால் அதை அனுமதிப்பீர்களா? சம உரிமை, சம உரிமை என வாய் கிழியக் கத்துவோர், பேனாக்களின் முனை மழுங்க எழுதுவோர் இதை அனுமதித்துத்தான் ஆக வேண்டும்.

வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள், கட்டிட வேலை செய்யும் பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள் அரை நிஜாரோடு, அதாவது… ஆண்கள் எப்படிக் கோவணத்துடன் அல்லது ஒரு அரைக்கால் டிரவுசருடன்; கீழாடையை போதுமானதாக்கிக் கொண்டு வேலை செய்கிறார்களோ, அதே போன்றுதான் பெண்களும் கீழாடையோடு மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்று பிரசாரத்தை வலுப்படுத்த வேண்டும். அப்பொழுதான் நீங்கள் எந்த சம உரிமையை எதிர்பார்க்கிறீர்களோ அந்த சம உரிமைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அறிவு ஜீவிகளே! மாதர் சங்கங்களே… மதச்சார்பற்ற சோஷலிஸ வாழ்க்கையை விரும்பும் முற்போக்குவாதிகளே… உங்களில் எத்துனைபேர் இந்தப் பிரச்சாரத்திற்குத் தயார்? முன் வருவீர்களா? இதற்கு நீங்கள் தயாரில்லை என்றால் நீங்களே வகுத்துக் கொண்ட சம உரிமை என்ற சித்தாந்தத்தின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதுதான் பொருள். எதைச் செய்யப் போகிறீர்கள்? கடைசியாக தஸ்லிமாவிற்காக தாளம் தட்ட வந்தவர்களுக்கு நாம் கூறுகிறோம்..

பெண்ணுரிமை வேண்டும்-அவசியம் வேண்டும்-ஆணித்தரமாக வேண்டும். அதை இஸ்லாம் கொஞ்சமும் குறைவில்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த உரிமைகளை ஆண்களின் உரிமைகளோடு ஒப்புநோக்கி குறை காணாதீர்கள். ஆண்களுக்கும் – பெண்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணருங்கள். உடலிலும், உணர்விலும் அவர்களுக்குள் உள்ள வேறுபாட்டை ஆராயுங்கள். அந்த வேறுபாடுகளை ஒன்றிணைத்தால் ஏற்படும் பின்விளைவுகளை அலசிப் பாருங்கள்.

பெண்ணைப் பெண்ணாக மதித்து, அவளுக்கென்று இஸ்லாம் கொடுத்துள்ள உரிமைகளில் உங்களுக்கு தவறுகள் தென்பட்டால் அதை பகிரங்கமாக விமர்சியுங்கள். உங்கள் விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கவும், விபரம் தெரிவிக்கவும் நாம் காத்திருக்கின்றோம்.  (தொடர்வோம்)

0 எண்ணங்கள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger